புதன், 16 ஜனவரி, 2019

புனைவிலிருந்து விலகலான வாசிப்பு

இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவிலிருந்து (இந்நாளை வாசிப்பிற்காக வருடத்தின் தொடக்கநாளாகக் கொள்வதால் இப்படி) அபுனைவுக்குள் மனத்தினை துழாவ விடலாம் என்றொரு பெரும் உவகை.

இரண்டாம் நாள் சென்று ஓவியம் மற்றும் கலை சார்ந்த புத்தகங்களோடு ஒரு மானுடவியல் சார்ந்த நூல் ஒன்றும் சிக்கியது, ஒரு வீட்டிலிருக்கும் பத்து பேருக்கு உள்ள முக வேறுபாட்டிற்கும், வேறு வேறு இனக்குழு அல்லது நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உள்ள முக வேறுபாடுகளுக்கும் இடைவெளி உண்டல்லவா, அதைப் பற்றி அறிய உதவும் நூல்.

இன்னொரு முறை சென்று சில கட்டுரை நூல்களை அள்ளி வர வேண்டுமென உள்ளம் உழன்று கிடக்கிறது வாய்ப்பிற்காக, வரும் ஞாயிறு அதற்கான நாளாக அமைய எண்ணுகிறேன். ஓவிய பயிற்சிக்காகவும் நிறைய வாசிக்க இருப்பதால் இம்முறை புனைவிலிருந்து சிறு விலகல். புனைவெழுதுவது எளிதாகிவிட்டதோ என்னவோ மலை போல் அடுக்குகிறார்கள் கதைகளை, சமகாலம் பெருங்கனவாக நம்முன் விரிந்து நிற்கிறது. தற்போதைக்கு அதை வேடிக்கை பார்க்கவும், நெடிய இடைவெளிக்குப் பின் இத்தளத்தில் கொஞ்சம் எழுதலாம் என்றொரு எண்ணமும். பயணிப்போம்..

3 கருத்துகள்:

vimalanperali சொன்னது…

பயணம்மும் எண்ணமும் சிறக்க வாழ்த்துக்கள்,,,/

Kasthuri Rengan சொன்னது…

கொஞ்சம் விலகி போனால் இன்னமுமே ரசனையாக இருக்கும்

உங்கள் ஓவியப் பயிற்சி குறித்து நிறைய எழுதினால் நலம்

Pandiaraj Jebarathinam சொன்னது…

மிக்க நன்றி!!

நிச்சயம் எழுதுகிறேன்😊