சனி, 29 ஜூன், 2024

இன்று பூத்த மலர்கள்

 எங்கிருந்து இப்பறவைகள் கோடாக என் தாள்களில் இறங்கி ஓடியதென்று இவ்விரவைக் கேட்கிறேன்









செவ்வாய், 25 ஜூன், 2024

அக்கா குருவி 4

ஏதுமில்லையென்று 

சொல்வதற்கன்றி 

வேறெதெற்குமில்லை பிறப்பு 

ஏதுமற்றதே 

எதையாவது செய்யவும் 

உந்துகிறது 



வியாழன், 20 ஜூன், 2024

அக்கா குருவி 3

ஒற்றை 

இருபது ரூபாய் தாளை

எண்ணும் அழுக்குத் தாடி முகம் 

கசங்கிய சேலை மடி

அதற்கும் கீழ் நடைபாதை 





புதன், 5 ஜூன், 2024

புதிதாக

தூவல் கொண்டு நான்கு ஓவியங்களை கித்தானில் உருவாக்கி வருகிறேன். இதெல்லாம் எதற்கு ஏன் யாருக்காக படைக்க வேண்டும் என்றொரு கேள்வி வருமல்லவா, வந்தது.

ஒரு முகத்தையோ அல்லது நிலத்தையோ வரையும் போது அந்த மனிதர் சார்ந்த அவ்விடம் புழங்கிய பல நினைவுகள் எண்ணத்தில் ஓடும், தாவிக் குதிக்கும். அதுவே தெரியாத முகமோ நிலமோவென்றால் சுவை கூடியச் சிந்தனை கற்பனையின் அளப்பரிய எல்லைக்குள் விழுந்து மூலத்தை தேடியலையும் இல்லையென்றால் அதைப் போலொன்றை தன் வாழ்வின் வழியில் அடையாளம் கண்டு வியக்கும்.

இந்த இரண்டுமின்றி புதிதாக ஒரு படத்தை உருவாக்கும் போது முழுக்க முழுக்க நினைவிலிருந்தோ கற்பனையிலிருந்தோ கோடுகளிலும் நிறங்களிலும் மனம் திளைக்கிறது. அதன் எல்லை தேடித் தொலைவது பேரானந்தம். அப்பெருமழையில் நனைந்து கொள்வேன்.