வெள்ளி, 25 ஜூலை, 2025

ஏன் இந்த ஓவியம்

உன்னுடைய ஓவியத்திற்கான விலை என்ன என்ற கேள்வியில் இருந்து தொடங்கியவர் விலையை அறிந்து கொண்டதும், எந்த அடிப்படையில் விலை உறுதி செய்யப்படுகிறது என்று கேட்டார். அதற்கு முன்னர் ஓவியத்தை பார்த்திருந்தவர் இதில் என்ன இருக்கிறது என்றும் தனக்கு அதைப்பற்றிய அறிவு ஏதுமில்லை எனவும் கூறினார். 

பொதுவாக எல்லோரும் ஓவியங்களையோ சிற்பங்களையோ நின்று பொறுமையாக உள்வாங்குவதில்லை. வெறுமனே படம் என்பதைக் கடந்து அங்கே ஓவியத்தில் கோடுகளுக்கும் வடிவங்களுக்கும் வண்ணங்களுக்கும் சில நோக்கங்கள் இருக்கிறது அதை கவனிக்கத் தொடங்கும் பொழுதில் கலை இன்பமானதாகவும் உணர்வுகளை பிணைப்பதாகவும் மாற்றம் கொள்கிறது. எனக்கு கற்பனை ஓவியங்கள் வரைவதில் ஆர்வமுண்டு அது பார்வையாளரை எங்கோவொரு இடத்தில் தான் காண்பதிலிருந்து ஒரு கருத்தையோ கதையையோ உருவாக்கிக்கொள்ளத் தூண்டும் இடத்தில் இருப்பதாக எண்ணுகிறேன்.

கருத்துகள் இல்லை: