வெகுநேரம்
அது ஆந்தை என்பதை உறுதி செய்யவே
நோக்கியிருந்தேன்
ஆந்தை பற்றிய அறிவு எதுவுமில்லை
அதன் முன்னூற்று
அறுபது கோணப் பார்வையன்றி
இதுகூட பிழையென்று
ஒருபக்கம் சிறகசைக்கிறது
பறவையைக் கண்டதும்
மனம் இலகுவாகிறது
தூரம் குறைந்தால்
அதில் குறை ஏற்படலாம்
இப்போது
தொலைநோக்கி இருந்தால் நலம்
என்றிருந்தது
மறுநாள்
வெள்ளைக் கோப்பையில்
குளம்பி ஊற்றி
ஆந்தையின் கண் தேடினேன்
சுடுதண்ணீர்
என்றொரு ஆங்கிலக் குரல்
முகமெங்கும் சிரிப்புடன்
ஒருவேளை
முன்னூற்று அறுபது கோணச் சிரிப்போ!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக