பக்கங்கள்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

கேலிப் புன்னகை

யார் எறிந்திருப்பார்கள்
எறிந்தபின் இறந்ததா
இறந்தபின் எறியப்பட்டதா
கேள்விகளோடு ..
குப்பையில் வீழ்ந்து கிடந்த
நாய்க்குட்டியை
அள்ளிச் சாக்குப்பையில்
நிரைப்பவனின்
உதட்டோரப் புன்னகை
கேள்வியை மௌனித்து
கேலி செய்தது எறிந்தவனை...

3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நல்ல வேதனை இருந்தது கவிதையில்.

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

சுடும் கவிதை! அருமை!

ரூபன் சொன்னது…

வணக்கம்
படிப்பவர்கள் உள்ளக்கிடக்கையில் சுள் என்று ஏறும் வரிகள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-