பக்கங்கள்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

மேகத்திரள்கள் வந்திருக்கின்றன

நண்பா
வானூர்தி நிலையத்தின்
கூரையிலிருந்து எட்டிப்பார்
மாலைச்சூரியன் கைபிடித்து
நாம் ரசித்து சிலாகிக்கும்
மேகத்திரள்கள் வந்திருக்கின்றன
உன்னை வழியனுப்ப
ஊர்தி உயரம் தொட்டதும்
கட்டளைக்குப் பின்
சாளரம் திறந்து
கண்களை மிதக்கவிட்டுப்பார்
உன் உறவுகளும் நட்புகளும்
வெண்திரளுருவமேற்று
பயணித்திருப்போம்
இனி வேறுபடும்
முழுநிலவு நாட்களின்
இரவுகள் நமது நினைவுகளை
சுமந்து திரியட்டும்

3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


உண்மைதான் சுகமாயினும் சுமைதான் நண்பரே...

ரூபன் சொன்னது…

வணக்கம்

அருமையான கற்பனை பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

சிறப்பான படைப்பு! நன்றி!