பக்கங்கள்

திங்கள், 1 செப்டம்பர், 2014

சுயநல வார்த்தைகள்

அகமகிழ்ந்து
நெகிழ்ச்சியிலிருக்கும் பொழுதில்
நிறைந்திருக்கும்
மதுக் கோப்பை
கோடை குற்றால அருவிபோல்
நெஞ்சப்பாறையில்
ஒழுகும் வேளையில்
மேலெழும்பும் சிலிர்ப்பான
சிரிப்பை தகர்த்தெழும்
வார்த்தைகள்
யாழ்பாணத்தில் புள்ளிவைத்து
நீளும் கோட்டில்
சரிந்துவிழும் அரசியல்
தலைகளுக்குப் பின்
கனடாவிற்கு நீண்டு ஆசுவாசமடைந்து
புலம் திரும்புகையில்
தான் தானாக மட்டுமே
இருப்பதை யெண்ணி
கதறியழுகிறது

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…


இந்நிலை ஒருநாள் மாறும் என நம்புவோம் நண்பரே,,,,
எனது கவிதை ,,மௌனமொழி,,