பக்கங்கள்

புதன், 18 பிப்ரவரி, 2015

பறக்கத் துவங்கியிருந்தது

அவளின்
மழலைச் சொல்
கொக்கு வரையச் சொன்னபோது
சிறுபிள்ளையில்
நான் வரைந்த கொக்குதான்
நிழலாடியது..

ஒன்று ஒற்றைக்காலில்
மீனுக்கான தேடலிலும்
மற்றொன்று
மீனை தன் அலகில்
ஏந்திக்கொண்டுமிருக்கும்...

அதில்
தேடலில் இருக்கும்
முதல் கொக்கை
வரைந்து காட்டினேன்..

"இதா கொக்கு கொண்டாங்க நான் வரையுதேன்" என்றவள்
வரைந்த கொக்கு
பறக்கத் துவங்கியிருந்தது...

4 கருத்துகள்:

ரூபன் சொன்னது…

வணக்கம்
அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
எனது பக்கம் கவிதையாக வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எரியும் தீப்பிளம்பு:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…


அவள் கை படவும் பறந்து விட்டதோ...ஹா ஹா ஹா

King Raj சொன்னது…

அழகு கவிதை..

பரிவை சே.குமார் சொன்னது…

வரைந்த கொக்கு பறக்கத் துவங்கியிருந்தது.... அவள் கை பட்டதால்... அப்படித்தானே....
அருமை.