பக்கங்கள்

புதன், 22 ஜூலை, 2015

எல்லாமே இல்லைதான்

மழை பெய்கிறது
கவிதை உருவம் பெறவில்லை
அத்தனைத் துளிகளும்
எழுத்துக்களாய்
உடலில் படர்ந்து
தரையில் ஊர்ந்து போகிறது
அவற்றைக் கோர்த்து
கவிதையெனும் கதவடைக்க விருப்பில்லை

குப்பை கொட்டியவர்களெல்லாம்
கதவடைத்து மூக்கடைத்து
நிற்க
சாக்கடை நாற்றம்

அன்னமாக மாறிவிட
மழைத்துளியின் மணம்
நாசியில்

இன்று சாளரம் சாத்திவிடலாம்
குளிருமில்லை கொசுவுமில்லை

எல்லாமே இல்லைதான்
இரவு இல்லையென்றால்
காலையும் இல்லைதான்

மழை
பெய்வதுபோல் பெய்கிறது

2 கருத்துகள்:

ரூபன் சொன்னது…

வணக்கம்
கவிதையின் வரிகள் அற்புதம் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…


ரசித்தேன் நண்பரே அருமை