வியாழன், 16 ஏப்ரல், 2015

சாக்கடை புழு

நீரில்லாத
தண்ணீர்ப்பந்தல்

சிரிக்கும்
அரசியல் முகங்கள்

நேற்றைய மழையில்
தேங்கியநீர்

சாமானியனெனும்
சாக்கடைப்புழு

6 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நல்ல உவமை நண்பரே வாழ்த்துகள்.

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி தோழரே

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ஒவ்வொரு வரிகளையும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

ஊமைக்கனவுகள் சொன்னது…

முரண்களின் முகமூடி களைந்து உண்மையின் பிம்பத்தைத் தெளிவித்திருக்கிறது தங்கள் கவிதை.
சாக்கடைப் புழு எனும் போது,
எத்தைத் தின்று எங்கே கிடக்கும் என்ற ஆழ்வானின் கேள்விக்கு
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்கிற தத்துவார்த்த மான பதில் நினைவுக்கு வந்தது.
சூக்குமங்களை காட்சிகள் கொண்டு தரிசிக்கச் செய்திருக்கிறீர்கள்..


தொடர்கிறேன்.


நான் ஒரு ரோபோ இல்லை என்பதை நிரூபித்திருக்கிறேன் :))

நன்றி

பெயரில்லா சொன்னது…

உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டி உள்ளது உங்கள் கவிதை! இது கவிதை இல்லை பலரின் நிலை!!