புதன், 3 பிப்ரவரி, 2016

கனவின் பரிமாணம்

பள்ளிப்பருவத்தில் கனவு வரும்போது ஒருதலைக் காதலிலோ நடிகையோ வந்து கிச்சுகிச்சு மூட்டி கிளர்ச்சியில் புரள வைப்பார்கள். மீண்டும் பள்ளிக்குச் சென்று பத்தாம் வகுப்பில் பாடம் கற்பதுபோல பரீட்சைக்கு செல்வதுபோல பள்ளி நினைவுகள், அலுவல் முடிந்த இரவின் கனவிலோ முறையற்ற ஞாயிற்றின் பகல் தூக்கத்திலோ வந்து குழப்பி விடும். 


அவ்வப்போது எழுத்துக்களும் எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் கனவில் வந்து மீளமுடியா கனவில் ஆழ்த்துகிறார்கள். இதை கனவின் பரிமாணமாக கொள்வதா இல்லை அறிவின் பரிமாணமாக ஏற்பதா என என்னையே கேட்டபோது இது தகவலின் பரிமாணம் என்றது என் சிற்றறிவு. கனவு நாம் வாழும் சூழலில் சேகரிக்கும் தகவல் மற்றும் நினைவின் குழப்பமான தெளிவு.


இப்பொழுதெல்லாம் ஏதேனும் காலச்சூழலில் தேவையற்று செலவு செய்ய நேர்ந்தால், வாங்க விரும்பும் வாங்காத புத்தகங்கள் கண்முன் அடுக்கப்படுவதை தவிர்க்க இயலவில்லை.

3 கருத்துகள்:

Naseem சொன்னது…

அருமையான படைப்பு நண்பரே.
தொடர்ந்து இன்னும் பல நல்ல படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி நண்பரே :-)

Paranthaman சொன்னது…

அருமை. நல்ல படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்