வியாழன், 2 ஜூன், 2016

கலைநிகழ்ச்சியெனும் கப்பித்தனம்

சனிக்கிழமை இரவு மணி பத்தை கடந்தபோது நாங்கள் கீழப்பாவூர் மைதானத்தை தாண்டி நகர்ந்து கொண்டிருந்தோம். காமராஜருக்கு விழா என நினைக்கிறேன், அவரது குடும்ப பொதுவாழ்வின் நிகழ்வுகளை ஒருவர் தடவித்தடவி பேசிக்கொண்டிருந்தார் (காலையிலோ மாலையிலோ முன்னொரு நற்பகல் வேளையிலோ யாரோ கூறக்கேட்டதை). வீடடைந்தபோது ஒரு தலைவர் நீண்ட நெடிய பார்வை பற்றி பேச முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக பெண்களை கொச்சைப்படுத்து திரையிசைப்பாடல்கள் (இவர்கள் இதை கலைநிகழ்ச்சி எனக் கூறுவார்கள்) ஒலிக்கத்துவங்கியது, குழந்தைகளை இதற்கு தயார் படுத்திய அந்த கேவலப்பிறவியை செருப்பெடுத்து அடித்தாலும் தகும் என்றே எண்ணினேன். நீண்ட நெடிய பார்வை பற்றி பேசிய அந்த தலைவருக்கு மேடையில் நடக்கும் சீரழிவு நிகழ்வு புலப்படவில்லை போல.(ஒருவேளை தூரப்பார்வையோ).

இறுதியாக பிட்டுப்படண்டோய் என்றொரு பாட்டு காதில் விழுந்ததாக நினைவு.

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

இன்றைய நிகழ்ச்சிகள் இப்படித்தான் நண்பரே