பக்கங்கள்

திங்கள், 8 மே, 2017

குழம்பிய வண்ணம்

நவீன ஓவியத்தை புரிந்துகொள்ள இருக்கும் வேட்கை அவ்வகை சித்திரங்களை காண்கையில் மனம் களைத்து இதுவென்னடா? என்ற சலிப்பான எண்ணம் உருவாகிவிடுவது தவிர்க்கயியலாதது. பழைய பாணி சித்திரங்களை எளிதாக புரிந்துகொள்வாயோ என்று கேட்டால் இல்லை. ஆனால் நமது பழைய வகைகள் ஒருவகையில் புராணக்கதைகளின் தொடர்புடனேயே இயங்கி வந்திருப்பதால் ஓரளவு அனுமானிக்க இயலும் என்றே கருதவேண்டியுள்ளது. தமிழக ஓவியங்கள் ஓர் வரலாறு புத்தகம் வாசிக்கத்தொடங்கிய பொழுதில் தோன்றியதென்னவோ நமக்கருகிலிருக்கும் ஓவியங்களை வெறுமனே வாசிப்பில் கடப்பதால் அறிகிறேன் என்று பிழை செய்வதே சரியாகிப்போகும். கொஞ்சம் அதிகமாகவே பயணப்பட வேண்டும்.

இதற்கிடையில்தான் மேற்கத்திய ஓவியங்களையும் ஓவியர்களையும் அறிந்து கொண்டாலென்ன என எண்ணம் மெல்ல சிதறுகிறது. அங்கே போனால் இசங்களை சுமந்துகொண்டு மேதைகள் பல மேற்கிலேயிருக்கிறோம் என்ற தொனியில் வரலாறு வெகு பின்னாலிருந்து முன்னோக்கு நகர்கிறது. இருந்தும் எம்.எஃப்.உசைன் பற்றி வாசிக்கையில் அறிமுகமான ரெம்ப்ராண்ட் நோக்கி கவனம் போனது. அவரது டைட்டஸின் உருவப்பட ஓவியத்தை பார்த்தபோது வண்ணங்களும் உணர்ச்சியும் எதையோ கிளரிவிட்டது. அதைப்பற்றி ஓரிரு வரிகள் எழுதிப் பதிவு போட்டிருக்கிறேன்.

இதெல்லாம் வேண்டாம் தமிழக ஓவியர்களை பற்றி தேடலாமென்று பெருக்கெடுத்த அவாவில், இணையத்தில் தஞ்சமடைந்தபோது விக்கிபீடியா கொஞ்சம் தகவலை கொடுக்கிறது (ஆங்கிலத்தில் தமிழக ஓவியர்கள் பற்றி விக்கி பக்கமே இல்லை எனத்தெரிகிறது! தெரிந்தால் பகிரவும்), "நவீன ஓவியம்" தமிழிலேயே தேடினால் கிடைத்தது யாவரும்.காம் இணையதளத்தில் ஜிவ.கரிகாலன் எழுதும் ஓவியம் பற்றிய தொடர். அதே போல் சில நாட்களுக்கு முன்பிருந்து ஓவிங்கள் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார் ஓவியர்.கணபதி சுப்ரமணியம்.

ஓவியம் பற்றிய தேடலுக்கு சரியான பாதையொன்று அமையப்பெறும் என நம்புவோம்.

கொஞ்சம் குழப்பமான பதிவுதான் என்பதை ஒத்துக்கிடுதேன்.

3 கருத்துகள்:

Bagawanjee KA சொன்னது…

தேடல் துவங்கியாச்சா ?சீக்கிரமே உங்க ரசனைக்குத் தீனி கிடைக்கும் !

ஒரு பெண்மணி வரைந்த ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன் ,அங்கே பார்வையாளர்கள் ஏட்டில் கருத்துக்களை எழுதிஇருந்தார்கள் ,அதில் காணப் பட்ட ஒரு வாசகம் 'நீ வரைந்த ஓவியங்கள் இடையே வரையாத ஓவியமாய் நீ நின்றுருந்தால் இன்னும் நான் மகிழ்ந்து இருப்பேன் 'என்று !நான் நினைத்தேன் ....தேனி குஞ்சம்மா ரேஞ்சில் ஒரு பெண்மணி வந்து'நான் வரைந்த ஓவியங்கள்தான் 'என்று சொல்லி இருந்தால் எவ்வளவு மகிழ்ந்து இருப்பாரோ :)

Pandiaraj Jebarathinam சொன்னது…

தீனிக்காகத்தானே!!

அதுயாரு தேனி குஞ்சம்மா?

Bagawanjee KA சொன்னது…

உங்களுக்கும் இன்னைக்கு பாயசத்தை போட்டுற வேண்டியது தான் என்றால் யார் நினைவுக்கு வர்றாரோ ,அவர்தான் தேனி.......:)