செவ்வாய், 13 ஜூன், 2017

காகித மனிதர்கள்

புதினங்களை வாழ்கையை தோண்டிப்பார்க்கும் மண்வெட்டி எனலாம். அதேபோல் மனிதர்களுடனான உரையாடல்கள் கலைந்துகிடக்கும் வாசிப்பின் பக்கங்களை அடுக்கிவைக்கும் அலமாரியாகக் கொள்ளலாமா?

"காகித மனிதர்கள்" பிரபஞ்சன் எழுத்தாக்கத்தில் வாசித்த முதல் புதினம், கதை. பல்கலைக்கழகங்களில் நடைபெறும் அரசியல் ஊழல்களையும் பெண்களை சீரழிக்கும் ஆசிரியர்களையும் பற்றிய கதையாடல். இதை வாசித்து மூன்று வருடங்களிருக்கும். மறக்கவியலாத மனித உருவங்களைப்பற்றியதும் அண்ணா நூலகம் செல்ல ஆரம்பித்த நாட்களில் வாசித்ததிலும் முக்கியமான புதினங்களில் இதுவுமொன்று, அதனாலேயே அலுவலக நண்பர் ஒருவரோடு உரையாடிய ("இத்தனை வருட அனுபவமிருந்தும் ஏன் ஒரு பட்டப்படிப்பை கற்காமல் திரிகிறாய், பதவி உயர்வுக்கு அது தேவையென யாருமே உன்னிடம் இதுவரை கூறியதில்லையா." "யாராவது கூறியும் கூறாமலும் அதைப்பற்றிய எண்ணங்கள் தீவிரமடையும் பொழுது மட்டும் இணையத்தில் சில பல்கலையின் பக்கங்களை படித்துவிட்டு கைவிடுவது வழக்கமாகிவிட்டது."  "எனக்குத்தெரிந்த ஆளொருவர் இருக்கிறார் தேர்வு நாளன்று சென்று திரும்பினால் போதும் மற்றவை அவரது கைகளில் (பணமும் பரீட்சைத்தாளும்), மற்றொரு நண்பரிடம் "நாம பணங்குடுக்க போல பொண்ணுங்கல்லாம் படு உசாரு" என்றார்) பின் அக்கதையின் பக்கங்கள் எழுத்துக்கள் அல்லாத காட்சி உருவங்களாக வந்து போயின.

புதினம் வெளிவந்தது எண்பதுகளில் என்று நினைக்கிறேன். காலமும் கல்வியும் நம்மை எந்த அளவீட்டில் மாற்றியிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது, இன்றைய உண்மை நிலை என்னவாக இருக்குமோ (ஒரு மனிதனின் உரையாடலில் முடிவுக்கு வரவியலாதல்லவா, அது அவரின் புனைவுப் பேச்சாகக்கூட இருக்கலாம்)இப்படித்தான் இருக்குமென்றால் யாரை குறை கூறுவது.

5 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அலசல் நன்று

Unknown சொன்னது…

நிலைமை இன்னும் மாறவில்லை ,முன்பைவிட மோசம் :)

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி சகோ ☺

Pandiaraj Jebarathinam சொன்னது…

மனிதர்கள் மாறினாலும் குணங்கள் மாறுவதில்லை. 😌

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

எல்லா அமைப்புமுறைகளிலும் கேடு கெட்ட மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள் நண்பரே! என்ன செய்வது, கல்வித்துறையும் அதற்கு விலக்கில்லை. அதற்காக நீங்கள் பட்டப் படிப்பைத் தொடர வேண்டா என்பதில்லை. மற்ற அமைப்புமுறைகளில் உள்ள கோளாறுகள் காரணமாக அவற்றை ஒதுக்கி வைத்து விட முடிகிறதா என்ன? அது போலத்தான்.