செவ்வாய், 21 ஜனவரி, 2025

தமிழ் முகம் - ஒளிப் படங்களின் காட்சி

"தமிழ் முகம்" எவ்வளவு அழகான தலைப்பு. ஒவ்வொரு ஊருக்கும் மாந்தருக்கும் மரம் செடி கொடிகளுக்கும் வேறுபட்ட பல முகங்கள் அதாவது வடிவங்கள் இருக்கும். இவை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருந்தால் அவை தமிழ் முகம் என்று ஒருங்கிணைந்து கொள்வது இயல்பு.

தான்தோன்றித்தனமாக தன் கண்களில் விரிவதையும் சுருங்குவதையும் அதன் தன்மை மாறாமல் தொகுத்து ஒளிப் படங்களின் கண்காட்சியாக விருந்து வைத்திருக்கிறார் சென்னை லலித் கலா அகாடமியில் ஒளிப்படக்காரர் நியா சேரா. 

இந்த தமிழ் முகங்களை காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்களும் நேரில் காணுங்கள் !!

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

அக்கா குருவி 15

பசியின் 
உரையாடல் கவனித்த 
நான் 

கடலுக்கும் வானுக்கும் 
இடையில் 
கிடைமட்ட கோடு
நான் 

காரணங்கள் கதைகள் 
இடையில் இல்லாத 
நான்