பக்கங்கள்

புதன், 27 ஜூலை, 2016

பேசியது நானா?!

வார இதழ்களை ஆன்மீக புத்தகங்களை டைம்பாஸ் வகை புத்தகங்களை வாசித்துவிட்டு முகநூலில் மேய்ந்துகொண்டிருக்கும் வாசகன் ஒருவன் (அவர்களும் வாசிக்கத்தானே செய்கிறார்கள்) கேட்கிறான். "இலக்கியம் வாசிக்கிறேன் என்கிறீர்கள் என்னிடம் நீங்கள் கொடுத்த எஸ்.ராமகிருஷ்ணனோட புத்தகம் இருக்கு. அதில் அவர் இலக்கிய வகை எழுத்துக்களை எழுதிக்கொண்டிருப்பதாக கூறுகிறார். எது இலக்கியம் எது இலக்கியத்துக்கான எழுத்து? இலக்கண சுத்தமாக இருப்பதுதான் இலக்கியமா?".

லேசாக சிரித்துவிட்டு எனக்கு நேர்ந்த அதே குழப்பமென எண்ணி. "இன்று பலரும் எழுதலாம். சிறுகதை, கட்டுரை, புதினம், நாடோடிக்கதைகள், சிறுவர் இலக்கியம் என பலவகையான கூறுகள் இங்கே எழுதப்படுகின்றன. அத்தனை இலக்கியமும் இலக்கண சுத்தத்தோடு எழுதப்படுவதில்லை. எழுதுபவனின் முதற்கடமை வாசிப்பது. அதுவின்றி எழுத்து சாத்தியப்படாது. அதன் மூலம் அறிந்துகொள்ளப்படும் மொழியின் நுணுக்கங்கள் அவனறியாது இலக்கணங்களை புகுத்திவிடும். முறையான கற்றலுக்கு வித்திடும். இலக்கணம் அறிந்தபின் அதை உடைந்து பகுத்து வாழ்வியலை எழுதப்பழகுகிறான் அங்கே இலக்கியம் பொலிவுற்று மாசற்ற மொழியின் கூற்றை வாசகனின் முன் விவரிக்கித்தொடங்குகிறது. இலக்கணம் படித்தால் இலக்கியம் படைப்பார்களா என்பதை உறுதியாக கூறவியலாது ஆனால் இலக்கியம் படித்தால் இலக்கணம் அணி சேர்ந்துவிடும்".

அவன் முகத்தில் தெளிவற்றவொரு சிரிப்பு. என்மனதில் ஒரு ஆத்ம திருப்தி "பேசுவது நானா" என்ற பெருங்கேள்வியோடு. ஆக வாசிப்போம் பகிர்வோம்.

10 கருத்துகள்:

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

அருமைய்யா!

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

நண்பரே! தமிழ்மண வாக்குப்பட்டை சேர்க்கவில்லையா?

Asokan Kuppusamy சொன்னது…

kavithaigal0510.blogspot.com-தளத்திற்கு வருகை தாருங்கள். தங்களின் இப்பதிவு மிக நன்று. முகநூலில் சுந்தர் என்ற பெயரில் கவிதை பதிவிட்டால் பத்து விருப்பும், சுந்தரி என்ற பெயரில் பதிவிட்டால் ஆயிரம் விருப்பும் பதிவிடுகிறார்களோ. படைப்புக்கு விருப்பா? அல்லது படைப்பாளியின் பாலின விருப்பா. என்னுடைய கருத்து சரிதானா

KILLERGEE Devakottai சொன்னது…

அலசல் நன்று
த.ம.1

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி :-)

Pandiaraj Jebarathinam சொன்னது…

படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கத்தான் செய்கிறது, தொடர் பதிவுகள் நமது தனி அடையாளமாக மாற்றம் காணும்போது தகுந்த விருப்பங்களும் கிடைக்கும். பாலின வேறுபாட்டால் விருப்பங்கள் கிடைக்கலாம் ஆனால் அது நிச்சயமாக உண்மைத்தன்மையை சுமந்து நிற்பதில்லை. நன்றி.

Pandiaraj Jebarathinam சொன்னது…

ஏற்கனவே இருந்தது எப்படி மாயமானதோ தெரியவில்லை. மீண்டும் இணைக்கிறேன். நன்றி.

Pandiaraj Jebarathinam சொன்னது…

உங்கள் பாராட்டு எழுத்தை ஊக்குவிக்கட்டும். நன்றியய்யா :-)

Pandiaraj Jebarathinam சொன்னது…

உங்கள் பாராட்டு எழுத்தை ஊக்குவிக்கட்டும். நன்றியய்யா :-)

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

வாக்களித்து விட்டேன்!