பக்கங்கள்

வெள்ளி, 20 ஜூன், 2014

நிலவில் நீர்..

காணாமல் போன
கதிரவனை நிலவொளியில்
தேடிக் கொண்டிருந்தன
நட்சத்திரங்கள்...
வெண்மேகத் திரள்கள்
உள்வாங்கிய நிலவொளியோடு
வானிலிருந்து பூமிக்கு
தொடர் படிக்கட்டுகளாக மாறியிருந்தன
தண்ணீர் போத்தலோடு
நடையிலிருந்தவன்
படியேறி நீரெடுக்க போனான்
நிலவுக்கு...

5 கருத்துகள்:

ரூபன் சொன்னது…

வணக்கம்
கவியில் கற்பனைநயம் மிக அருமையாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் நல்ல கவிதைகள் பிறக்கிறது. தொடர்ந்து பயணியுங்கள் எப்போது உங்கள் பக்கத்தை தொடர்கிறேன்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜெ.பாண்டியன் சொன்னது…

ரூபன் : வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல தோழரே..
தொடர்ந்து பயணிப்போம்...

King Raj சொன்னது…

நிலவிற்கு நீர் தேடிச்செல்லும் காலம் விரைவில் வரலாம்.... அருமையான கவிதை வாழ்த்துக்கள்.

Mythily kasthuri rengan சொன்னது…

மெருகேறி இருக்கின்ற சொற்கள்!
நல்லதொரு கவிதை சகோ:)
http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post_8.html

ஜெ.பாண்டியன் சொன்னது…

வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல... Mythily kasthuri rengan & King Raj