வியாழன், 26 ஜூன், 2014

அசரீரியின் குரல் ஒன்று...

எங்கோ ஒருநாள்...
அமர்ந்திருக்கும் அலுவலகத்திலோ
ஊர்ந்து போகும் நகரப்பேரூந்திலோ
அசதியில் கண்ணயரும்போது
அசரீரியின் குரல் ஒன்று
கேட்டு ம்ம் என்ற முனங்கலோடு
எழுந்து செவி திருகிய போதும்
கேட்கும் குரல் 
அப்பா வுடையதோ
அம்மா வுடையதோ
அன்புக்குரிய வருடையதோ
ஆகிப்போனால்
அகம் மகிழ்ந்து போகிறது..
எழுதி முடித்து
அயர்ந்த போது
அம்மாவின் குரல் கேட்கிறது...

9 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

குரலுக்கு இவ்வளவு கற்பனையா?சொல்லிச்சென்ற விதம் நன்று இறுதியில் முடித்த விதமும் நன்று வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Pandiaraj Jebarathinam சொன்னது…

குரலுக்கான கற்பனை எல்லாம் இல்லை சகோதரரே,, நிசத்திலும் கேட்கும் குரல்தான்..உங்களுக்கும் கேட்டிருக்குமே..
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் சகோ..

மகிழ்நிறை சொன்னது…

அம்மாவின் அன்பை தொட்டுச செல்லும் ஈரமான கவிதை!!

geevanathy சொன்னது…

அன்புக்குரியவர்களின் குரல்களால் அழகாகிறது கவிதை

kingraj சொன்னது…

எங்கேனு ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அழகான கவிதை வரிகள் தொடர வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி சொன்னது…

எப்போதும் அசரீரியாய் ஒலித்துக் கொண்டிருக்கும் அன்புக்குரியவர்களின் குரல். கவிதை அருமை. பாராட்டுகள். தமிழ்மன்றத்தில் பாவூர் பாண்டி நீங்கள்தானே?

Pandiaraj Jebarathinam சொன்னது…

உண்மைதான் நன்றி மைதிலி சகோ ...

Pandiaraj Jebarathinam சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பர்களே... தங்கராசா ஜீவராஜ் & King Raj,

Pandiaraj Jebarathinam சொன்னது…

அதே பாவூர் பாண்டி தான் வருகைக்கு நன்றிகள்.... @கீத மஞ்சரி