பக்கங்கள்

புதன், 25 ஜூன், 2014

மூத்திர அரசியல்...

சுண்ணாம்புக் கலவையில்
வெள்ளைப் பூச்சு கண்டிருக்கும்
புதுச் சுவரில்
மூத்திரத்தால் பெயர் எழுதியவனுக்கு
வயக்காட்டில் அப்பன்
வரப்பு வெட்டியது
ஞாபகம் வந்திருக்க வேண்டும்..
நண்பர்களை அழைத்து
சுவரின் அருகாமையில்
பசுமை படர்த்தியிருக்கும் புல்லில்
அதே மூத்திரத்தால்
வரப்பு வைத்தான்...
மூவரில் எவர் மூத்திரத்திற்கு
ஆற்றல் அதிகமென சோதித்து
பார்க்கும் நேரம்
இந்த சிறுவனுக்கு
எந்த அரசியலும் தெரிந்திருக்கவில்லை.....

2 கருத்துகள்:

ரூபன் சொன்னது…

வணக்கம்
சகோதரன்

நல்லமறைமுக உவமைமூலம் கவிதையை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜெ.பாண்டியன் சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல சகோதரரே..