இன்று ஒரு பெருத்த மழைநாள்.....
விழித்துக் கொண்டிருந்த ஏரியை
விலைக்கு வாங்கி
அடிவானம் தோண்டி
வானம் பார்த்த கட்டிடம்
கால்கள் உடைந்து
கண நேரத்தில்
கரைந்து விழுந்தது....
ஏரியின் கண்ணீரும் பெருங்கோபமும்
இடியும் மின்னலுமென
பெய்த மழையில்
கட்டடம் மூடிய தன்
கண்களின் நீரை கசியவிட்டு
உள்ளிருப்போரை அழவிட்டது...
கரையிலிருக்கும் கடமை மறந்த
கட்சிக் காரர்களும்
கல்லா நிறைக்கும் கயவனும்
துணை போகும் அதிகாரியும்
அழப்போவதில்லை
இனி எப்போதும்...
ஆயிரம் கோடிகள் பெற்று கொடுத்த
அனுமதிப்பத்திரத்திற்கு இருக்கும்
குற்றவுணர்ச்சி இவர்களுக்கு
இருக்கப் போவதில்லை...
மக்கள் வரிப்பணத்தில்
அரசு கொடுக்கும்
இரண்டு லட்சத்தில்
இவர்கள் கரைந்து போய்விடுவார்கள்...
அழும் ஏரிகளுக்கும்
அழும் ஏழைகளுக்கும்
என்றும் பெருத்த மழைதான்
இடியுமின்னலும் சேர்ந்த.......
6 கருத்துகள்:
வலைச்சர அறிமுகத்தின் மூலம் என் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி. நடக்கும் நிகழ்வுகளின் அவலங்களின் எதிரொலி உங்கள் பதிவில் தெரிகிறதுஏரிகளும் குளங்களும் காங்க்ரீட் காடுகளாக மாறி வருவது கவலைப் பட வேண்டிய விஷயம் நடக்கும் நிகழ்வுகளின் காரணம் தெரியாதவரா நம் மக்கள். தெரிந்தே இழைக்கப் படும் அநீதிக்குத் துணை போகிறவரே அதிகம் உங்கள் ஆதங்கத்தில் பங்கு கொள்கிறேன்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அய்யா..
சோகம். ஆக்கம் அருமை.
என்றுதான் இதற்க்கு ஒரு விடிவுகாலம் வருமோ ?
சோகப்படுவது மட்டுமே சுகப்பட்டுவிட்டது தமிழனுக்கு.. கருத்திற்கு நன்றிகள்..@ King Raj
காலம் பிறப்பது நம் கையில் தான் உள்ளது... கருத்திற்கு நன்றிகள்.. @ KILLERGEE Devakottai
கருத்துரையிடுக