வியாழன், 29 மே, 2014

மழையின் உறவு...


மழையின் உறவு



அது ஒரு மழைநாள் 
மூன்று ஒன்பதுகள் 
நிகழ்ந்துவிட்ட போதும் 
முதல் மழையில் நனைந்ததில்லை.. 
விழும் அத்தனை துளிகளும் 
எனக்கென விழுமெனக்கூட 
நினைத்திருக்கிறேன்.. 
துளிகளுக்கு 
துணைகளின் தேவை இருப்பதில்லை 
தொடக்கத்தில் தனியாகவே 
விழுகின்றன.. 
இறுதியும் அப்படியே ஆகிப்போகிறது 
இடையில் வருவது 
இடையிலேயே போய்விடுகிறது...

4 கருத்துகள்:

அ. பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோதரர். தங்கள் கவிதையும் வலைப்பக்க வடிவமைப்பும் மிகவும் கவர்கிறது. தொடருங்கள் தங்கள் எண்ணங்களை எழுத்தாக்கி இங்கே நடைபழக விடுங்கள். வாழ்த்துக்கள்.

rajjeba சொன்னது…

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல பாண்டியன் அவர்களே..

Vimalan Perali சொன்னது…

இடையிலேயே வந்தது இடையிலே போனாலும் அது ஏற்படுத்திச்சென்று விடுகிற பாதிப்பு என ஒன்று இருக்கிறதுதானே?

rajjeba சொன்னது…

அது என்னவோ உண்மைதான்.. சிறப்பான துளிகள் செம்மை புகுத்தும் நம் வாழ்வில்...வருகைக்கு நன்றிகள் விமலன் அய்யா அவர்களே..