புதன், 22 ஜூன், 2016

இண்டமுள்ளு அரசனோடு ஓர் அறிமுகம்

முதல்கதையை வாசிக்கத் துவங்கும் போது அரியலூர் பேருந்து நிலையத்தில் இறங்கி நிற்கும் அயலூர்காரன் போல சிறிது விழித்ததை மறுக்க இயலாது. ஒழுங்கை என்ற வார்த்தை எனக்கு அ.முத்துலிங்கம் எழுதிய அக்கா சிறுகதைத் தொகுப்பை நினைவுபடுத்தியது அன்றுதான் அவ்வார்தை அறிமுகம் நிகழ்ந்தது.


பால்யத்திலிருந்து பதின்மம் தொடங்கி இன்றுவரை மனக்குகை இருட்டுக்குள் ஒழிந்துகிடக்கும் நினைவுகளை தன் கதைமொழி வழி வெளிச்சத்திற்கு இழுத்து வந்திருக்கிறார் அரசன். ஒன்றிரண்டைத் தவிர ஏனைய கதைகள் மரணத்தையும் காமத்தையும் தழுவியே பேசப்பட்டிருக்கின்றன. இது திட்டமிட்டு எழுதியதா இல்லை எழுத்தின் போக்கில் அமைந்ததா என்று தெரியவில்லை. மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்து கழிக்கிறார்களோ.


முதலில் கூறியது போல அயலூர்காரனாகவே கதைகளை வாசித்தேன். அரியலூர்வாசியோடு பழகியிருந்தால் வாசிப்பின் பொழுதில் வழக்கு மொழி இன்னும் சுவையை எட்டியிருக்கும். புத்தகம் நம் புது நண்பராகிப்போவது இப்படித்தான் நிகழ்ந்துவிடுகின்றது.


நலுவன் கதை தமிழ் சினிமாத்தனத்தை தன்மீது அப்பிக்கொண்டதை ஊகிக்க முடிந்தது. நாராயணனின் பண்ணையார் குணம், அவனால் பாதிப்படையும் பெண்ணின் மீது களவு பழி சுமத்துதல்.


அரசனுக்கு இது முதல் புத்தகம். இணையத்தின் வழி கரைசேரா அலைகள் வலைப்பக்கத்தில் எழுதிவரும் அன்பர். இவரின் மொழிவளம் இன்னும் சிறக்கட்டும். வாழ்த்துவோம் மொழி செழிக்கட்டும்.

5 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

எமது வாழ்த்துகளும் சேரட்டும் நண்பரே...

K. ASOKAN சொன்னது…

வாழ்த்துகள் வளர்க

mehanathan சொன்னது…

வாழ்த்துக்கள், சகோ,

'பரிவை' சே.குமார் சொன்னது…

நறுக் விமர்சனம்.
அரசனுக்கு வாழ்த்துக்கள்.

arasan சொன்னது…

வணக்கம் நண்பா ....

நுணுக்கமாக வாசித்துவிட்டு அதைப்பற்றி எழுதியமைக்கும் நன்றிகள். உள்ளுக்குள் உந்திக்கொண்டிருந்த நிகழ்வுகளை கதையாக்குவதில் நேர்ந்த தவறுகள் நிறைய இருக்கின்றன. எனது நூலிலும் அது நேர்ந்திருக்கிறது. இனிவரும் படைப்புகளில் கவனம் கொள்கிறேன். எனது மண்ணைப் பற்றி எழுத்தில் பெரிதும் பதிவு செய்யாமல் இருக்கிறதே என்ற ஆதங்கத்தில் தான் இம்முயற்சியை மேற்கொண்டேன். கதை மொழியிலும், கட்டமைப்பிலும் கவனம் வேண்டும் அதற்கு இதுபோன்ற கருத்துரைகள் மிகவும் தேவை.... கவனம் கொள்கிறேன் நண்பா ... அன்பும் பிரியமும் ....

- அரசன்