சனி, 15 ஆகஸ்ட், 2026

நற்கீறல் - ஐம்பத்தி இரண்டு

நற்கீறல் ஐம்பத்தி இரண்டாவது வாரத்தை நேற்று சென்னை பாண்டி பசாரில் மனித முகம் வரையும் பயிற்சியுடன் நிறைவு செய்தோம். இந்த ஒராண்டுப் பயணத்தில் வெளிப்புறத்திற்கு சென்று வரைவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம்,  வேறுவேறு அளவிலான தூவல் கோட்டோவியங்களில் மரம், நிலப்பரப்பு, கோயில் எனத் தொடர்ந்து வரையும் பொழுதில் கற்றுக் கொண்டவை ஏராளம். ஒவ்வொரு இலையும் கிளையும் நிலமும் வரையும் கோடுகளும் வெவ்வேறு தன்மையுடையவை அவை கொடுத்த இன்பம் அதனினும் மேலானது.

கருத்துகள் இல்லை: