வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு

ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

                              https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRqSyEuCIdk_pDU55guK_dGnbK39l4WDpJVSoBMDwW_7N_NgL_RFhhugYDjgDqbOUw1FaoLJDiut1s4ADLFo_-tbRa6HWwMOIcS6jDHlLA2jiyzHNkanHceYklXPVr1IapC4WLKsg6SSHG/s1600/Untitled-3+copy.jpg

கவிதையாக எழுதி வடிக்க
ஓவியமுன்னை உற்றுகையில்
எழுதுகோலின் மைவழி இறங்க மறுத்த
வார்த்தைகள் உன் விரலிடுக்கில்
சிக்கிக்கொண்டு சந்தத்தோடு
ஏளனம் செய்ய இசைகிறாய்..

ஓரப் புன்னகையில் விழும்
கதுப்புக் குழியில் தேங்கிப்போனவனை
மலர்விழிப் பார்வையில்
மதியிழக்கச் செய்து
மல்லி மலரை முழுமதியுன்
கருங்குழல் சூட
கள்ள விழியால் கபடம் செய்கிறாய்..

விழியில் வீழ்ந்து தூரம்
நிற்க கடவாமல்
நெருங்க விழைந்தவனை
பூக்கள் நிறைந்த கூடையோடு
வாசல்புறம் அடிவைத்து
பாத மணிகளினோசையில்
பரிதவிக்கச் செய்கிறாய்..

இனிநான் விலகி நிற்க
  மறுக்குமுன் புன்முறுவலை..
அழைக்கும் விழிகளை ஏற்று
      மெய்யான ரகசியம் இனி என் விழிகளுக்கு...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விரும்பிய தலைப்பிற்கான கவிதை:

செயலற்ற வார்த்தைக் கூட்டம்

நீண்ட பட்டைச்சாலையில்
பாதம் பதிக்கும் முதல் சிறுபொழுதிலும்
சாலையின் உறவை முறிக்கும்
நான்காம் சிறுபொழுதிலுமென
சாலையோரம் மலங் கழிப்பவனாகவும்
பச்சை போத்தலில் நீராகாரம் உறிஞ்சுபவனாகவும்
ஊர்வாரியில் கிடக்கும்
ஆகாரப் பொட்டலம் திரட்டுபவனாகவும்
அலைந்து திரியும்
நெகிழிப் பையை கால் சட்டையாக அணிந்தவனுக்கு
கந்தலான மேல்சட்டை மட்டும்
எவரோ கொடுத்திருக்க வேண்டும்
இல்லை அவனே குப்பையிலிருந்து
உருவியிருக்க வேண்டும்
கடந்த ஒரு ஆண்டாய்
இந்த ஐந்து பர்லாங்கு தொலைவில்
திரிபவன்; சில நேரங்களில் மட்டும்
குன்றின் திசை நோக்கி
வேற்று மொழியில் கதைக்கிறான்
அந்த குமரனுக்கு இது புரிந்திருக்கவில்லை போல
இன்றும் அதே நெகிழிப்பையும்
போத்தலுமாக திரிபவனுக்கு
இந்த வார்த்தைக் கூட்டத்தாலும் 
எந்த பயனுமிருக்கப் போவதில்லை....

8 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


கவிதை அருமையாக இருக்கிறது நண்பரே,,, போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்.
நண்பா இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி விட்டீர்களா ?

KILLERGEE Devakottai சொன்னது…


கவிதை அருமையாக இருக்கிறது நண்பரே,,, போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்.
நண்பா இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி விட்டீர்களா ?

இளமதி சொன்னது…

இரண்டு கவிதைகளும் மிக அருமை!
அதில் முதாவது கவிதைக்கான படத்தை ரொம்பவே உற்று நோக்கி அருமையாக வார்த்தைக் கோர்வையாகக் கவி புனைந்துள்ளீர்கள்!

மிகச் சிறப்பு! போட்டியில் வெற்றி பெற உளமார வாழ்த்துக்கிறேன் சகோதரரே!

Unknown சொன்னது…

கன்னியின் கண்விழி மட்டுமல்ல,உங்கள் கவிதையும் போதை ஊட்டுதே!
வெற்றி பெற வாழ்த்துக்கள் !

Pandiaraj Jebarathinam சொன்னது…

KILLERGEE Devakottai// நண்பா நடுவர்களுக்கு அனுப்பியாகிவிட்டது.
கருத்திற்கு நன்றிகள்..

Pandiaraj Jebarathinam சொன்னது…

இளமதி///ரசித்து பாராட்டிய சகோதரிக்கு நன்றிகள்...

Pandiaraj Jebarathinam சொன்னது…

Bagawanjee KA // ரசித்து பாராட்டியது மகிழ்ச்சி..

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

இரண்டு கவிதையும் அருமையாக உள்ளது.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-