சனி, 2 ஆகஸ்ட், 2014

இரு நிமிடமாவது

பயணிகள் நிழற்க்குடையில்
ஒதுங்கி யிருக்கும் போது
தன் கைத்தடியை
தொடையில் சாத்திவிட்டு
சிலரிடம்
கைகளை கூப்பி ஏதோ
கேட்டுக் கொண்டிருந்தார்
எனக்கு அவரது
மகனையோ மகளையோ
திட்டவேண்டும் போலிருந்தது
இருந்தும்
நான் என்ன நினைக்கிறேனென
அலைபேசியின் கண்ணாடியை
பார்த்தபோது
என்னை இரு நிமிடமாவது
அவரது மகனாக
இருக்க கூறி மறைந்தார்

5 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

சமுகத்தில் நிறைய பேருடைய முதுமை வாழ்க்கை இப்படித்தான் நண்பா.

Pandiaraj Jebarathinam சொன்னது…

பெத்துப்போட்ட பயலுவ என்ன பண்ணுதுன்னு தெரியலையே நண்பா..
///எங்கையாவது குளிர்சாதன அறையில் குளிர்க்காற்றில் நீச்சலடித்துக்கொண்டிருப்பானோ

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
கற்பனை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பெற்று வளர்த்தவரை பிச்சையெடுக்க வைத்துவிட்டு பிள்ளைகள் எங்கு பிச்சை எடுக்கின்றனரோ? அருமையான கவிதை!

Gnana sekaran சொன்னது…

அருமையான வரிகள்...