வியாழன், 31 ஜூலை, 2014

மாறாத செய்திகளாய்

இன்றைய பொழுதுகளில்
செய்தித் தாள்கள் எளிதாக
புரட்டிக் கடந்து போகும் அளவில்
இல்லை..
மாறாத செய்திகளாய்
வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கும்
நாட்கள்
நெஞ்சில் விதைத்துப் போகும்
வலியும் வேதனையும்
அந்தப் பக்கங்களிலேயே
தேங்கிப் போய்விடுகின்றன...

இங்கு
மனித வாழ்வியல் அறம் மறந்து
குற்றவுணர்ச்சி அற்று
இக்காம மிருகங்கள்
வாழ முடிந்த நரகத்திலும்
கல்வி கற்ற மூடர்கள் மத்தியிலும்
வாடிய மொட்டுக்களுக்கும்
அதன் செடிகளுக்கும்
பதில்கள் என்றும்
கேள்விக்குறி போல் நிற்கும்
நம்
அறியாமையும் இயலாமையும் தான்..

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


100 க்கு 100 உண்மையே,,,

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
உண்மையான வரிகள்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அறியாமையும் இயலாமையும்தான்...// உண்மை!

Pandiaraj Jebarathinam சொன்னது…

உண்மையை உணர்ந்து கருத்துரைத்தமைக்கு நன்றிகள் தோழர்களே....