பக்கங்கள்

புதன், 9 ஜூலை, 2014

இந்த இதழ்கள் இடம்பெயராதா.....

வாரம் தவறாது
வாசல் கொண்டுவரும் வார இதழின்
முகப்பிலும்
இன்னபிற பக்கங்களிலும்
முழுக் காலும்
இடையு முரித்த பெண்கள்
இடை குறுக்கி
கிறக்கும் கண்களும்
முறுவல் புன்னகையுமாய்
பெரும்பாலும் திரைப்பட மாதவிகள்தான்..

வாசிக்கும் வாசகனின்
கண்களிலும் மனத்திலும்
இச்சைகளை
கிளர்ந்தெளச் செய்கிறார்கள்....

பின்னொருநாள் அதே இதழின்
வேறு பதிப்பின்
பக்கங்களை புரட்டி
பாதி கடந்திருந்த போது..

சாகசபட்சிகளால் எழுதப்பட்ட
பெண்ணியக் கவிதையும்
கட்டுரையும்
ஏகத்துக்கும் எடுத்துரைக்கும்
இதோபதேசம்
அதே வாசகனின் மனத்தில்
என்ன சிந்தையை
வித்திட முடியும்....

ஒன்றிலிருந்து மற்றொன்றை
புறக்கணித்து தான்
வாசிக்கவோ நேர்படவோ
வேண்டும் என்றால்
இந்த கவிதையை
நீங்கள் நிராகரித்துவிடுங்கள்...
ஆம் !
அதே நேரம்
இந்த வார இதழ்கள்
என் போன்றோர் களால்
நிராகரிக்கப் பட்டிருக்கும்....

5 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


மனக்குமுறலை கவிதை வடிவில் வெளிப்டுத்திய விதம் அருமை நண்பா....

ரூபன் சொன்னது…

வணக்கம்
அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி சொன்னது…

வணக்கம் சகோதரரே!

உள்ளக் குமுறல் உரைத்தீரே! இங்குபுறம்
தள்ளுவர் யாரோ தடுத்து!

அழகிய கவிதைகள், ஆக்கங்களை இங்கு காண்கிறேன். அருமை!

தொடர்கிறேன்!...

வாழ்த்துக்கள் சகோ!

amas சொன்னது…

right on the money!

amas32

Iniya சொன்னது…

குமுறலை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்
நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!