பக்கங்கள்

செவ்வாய், 15 ஜூலை, 2014

தென்றலும் அன்னியமாகும்....

பெரும்பாலும் பாலைவனப் 
பயணமாகிப்போகும் ரயில் பயணத்திலிருந்து 
எடுத்து வைத்த முதல் அடியிலேயே
உடல் சிலிர்க்க செய்யும் சாரலையும் 
உள்ளிழுத்து நுரையீரல் தழுவும் 
தென்றலையும் நுகர்ந்து கொண்டே 
தென் பொதிகை மலை மீது 
பெருமையோடு கண்களை பரப்பினேன்...
அடுத்த இரண்டு நாளில் 
இந்த அனிச்சை செயல்கள் 
அன்னியமாகும் போது
கைவிரலால் நுரையீரலை 
சிறை பிடித்துக் கொண்டிருப்பேன் 
சிங்கார நகரத்திலே யெனும்
பின் மன ஓட்டங்களோடு....

3 கருத்துகள்:

ரூபன் சொன்னது…

வணக்கம்
அழகு கற்பனையில் அழகு கவிதை கண்டேன்... மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…


நல்ல கற்பனை நல்ல கவிதை பாராட்டுக்கள் நண்பரே...

ஜெ.பாண்டியன் சொன்னது…

நன்றி நண்பர்களே ரசித்தமைக்கும் வருகைக்கும்...கற்பனை மட்டுமல்ல உண்மைகூடதான்..