இந்த இரண்டு படங்களும் நேற்று வரைந்தவை. மேலுள்ள சொற்களுக்கும் இவற்றிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சனி, 14 நவம்பர், 2026
கதைக்கு இடையே இருவர்
ஜி.நாகராஜனின் "டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்" கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். அருகில் ஒருவன் Candy Crush விளையாட்டையும் அவன் தோளில் சாய்த்த தலையோடு சிக்கலான கோடுகளை களைந்தெடுக்கும் விளையாட்டை ஒருத்தியும் ஆடிக் கொண்டிருந்தனர். தேவயானை தன் தற்கொலை முயற்சியில் கடினப்பட்டு சுருக்கிடும் வேளையில் இவர்கள் இருவரும் தங்களது அலைபேசியை கை மாற்றி விளையாட்டையும் மாற்றிக் கொண்டனர். பெருத்த பெருச்சாளிகளுக்கு ஏன் இந்த Candy Crush விளையாட்டு பிடித்திருக்கிறது என்று புரியவில்லை ஒருவேளை அதன் முடிவற்ற தன்மையைத் தேடி மனம் அலையும் உளவியல் சிக்கலாக இருக்கலாம் என ஒரு முடிவுக்கு வருகிறேன். ஐந்து ரூபாயைத் தேடி மாடிக்கு வந்த தேவயானை சுருக்குக் கயிற்றைப் பார்த்து திகைத்து நின்ற போது விருத்தாச்சலம் வந்து விட்டது அவர்கள் இறங்கிவிட்டார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக