பக்கங்கள்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

இளம்புயல் வீசட்டும்..!!

நின் புயல்
இந்திய எல்லையில்
அடங்கிவிடாது
திரைகட லோடி
வீசவேண்டுவேன் !!

அடிப்படை
ஆதாரமின்றி தவித்துக்
கிடக்கும் கடைக்
கோடி மக்களை
காத்திட, அறைக்
கூவலிடும் வெள்ளுடை
வேடர்களை வேரறுக்கவும்
தயங்காது வீசட்டும் !!

கல்வி அது
சாத்தான் கை
நீங்கி, நல்லோர் கை
சேர்ந்திட வினை
புரிய வேண்டும்
நின் புயல் !!

இன்றைய கல்வி யற்று
சிறந்ததொரு
கல்வி யறிவை
மக்கள்தான் பெற்று
பகுத்தறிவுடன்
சாதியையும், மதத்தையும்
பிய்த்து எரியட்டும்
நின் புயல் !!

மிகையான ஏட்டுக்
கல்வி
மிகையான வரதட்சணை ?!
மிகையான அலுவல்
வெகுமதி
மிகையான வரதட்சணை ?!
இங்ஙனம் புதிய
பாதையில் வசூல் செய்யும்
நய வஞ்சகர்களை
வேரறுக்கட்டும்
நின் புயல் !!

லஞ்சம் ஊழல்
ஊதிப் பெருத்துள்ளது;
உற்றோன் துணை
கொண்டே
உதிர்த்து விடட்டும்
நின் புயல் !!

எட்டுத்திக்கும்
வீசட்டும் நின் புயல் !!
ஓயாது ஒலிக்கட்டும்
நின் குரல் !!
செழிக்கட்டும்
மக்கள் நலன் !!

2 கருத்துகள்:

பாவூர் சசி சொன்னது…

Visattum.......

rajjeba சொன்னது…

நிச்சயமா வளரும்...