பக்கங்கள்

சனி, 11 ஜனவரி, 2014

பொங்கலோ பொங்கல் !!

ஆதவனை வாழ்த்தி வணங்கிட வரும்
ஒருநாள் இத் தைத் திருநாள் !
உழவன் இன்பம் பல்கும் இனிய
ஒருநாள் இப் பொங்கல் திருநாள் !

அதி காலை வண்ணக்கோல மிட்டு
இல்லம் அழகுபெறச் செய்யும் திருநாள் !
பொங்கல் சமைத்து கோமா தாவை
வணங்கும் ஒருநாள் இத் திருநாள் !

கரும்பின் தித்திப்பை சுவைத்து இனிய
சொல் உறவாடும் நல்லோர் திருநாள் !
மஞ்சள் மிளகுடன் பனங் கிழங்கு
சமைத்து புசிக்கும் இத் திருநாள் !

நெஞ்சில் விதைத்த வீரம் களத்தில்
அறுவடை செய்யும் இத் திருநாள் !
வள்ளுவம் போற்றும் தமிழ் புலவர்
திரு வள்ளுவருக்கு ஒரு திருநாள் !

இத் திருநாளை போற்றி நல்லோர்
வழங்கும் தமிழ் உலகு செழித்து
உழவர்களின் கை இந்தத் தையில்
சிறக்கச் செய்வோம்!

வீரத் தமிழுக்கும் தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல் !!

கருத்துகள் இல்லை: