பக்கங்கள்

புதன், 29 ஜனவரி, 2014

இறந்த கால நாட்கள் ..!!

என் வீட்டுக்
கதவின்
முகம் அதில் !

பத்திரிக்கையில்
வலம் வரும்
கடவுளும், தலைவர்களும்
அச்சாகிப் போன
நாட்கள் !!

அம்மையின்
சேலை ஊஞ்சலாகித்
தாலாட்டிய
நாட்கள் !!

கோடையின்
இரவில்
எண்ணி எண்ணிக்
கடைசி நட்சத்திரம்
காணுமுன், தென்றலின்
வருடலால்
அப்பாவின் அணைப்பில்
உறங்கிப் போன
நாட்கள் !!

இறந்த கால
நினைவுகளாய்
நெஞ்சில் நிலைத்த
நீங்கா
இந்நாட்கள் !!

கருத்துகள் இல்லை: