திங்கள், 7 அக்டோபர், 2024

ஓவியம் வரைவது எப்படி - கோடுகள் - 1

ஓவியம் வரைவதற்கு அடிப்படையான கருவிகள் தவிர்த்து சில கூறுகள் நமக்கு முக்கியமானவை. முதன்மையான மற்றும் அதிமுக்கியமான கோடு பற்றி இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். என்னடா இது கோடு கீடுன்னு ஆரம்பமாகுதேன்னு ரொம்ப வேதனையா இருந்தா உங்களுக்கு ஒரு சின்ன உற்சாகத்தைக் கொடுக்க விரும்புகிறேன்.

வாயை நன்றாக இறுக மூடிக்கொண்டு இந்த உலகில் இதுவரை எவருமே சிரிக்காத சிரிப்பொன்றை பல் வெளியே தெரியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துவிட்டு, ஒரு கரிக்கோலையும் (பென்சில்) வெள்ளைத்தாள் ஒன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். கோடுகளை கிறுக்க பழைய செய்தித் தாள்களை பயன்படுத்துவது எனது வழக்கம்.


முதலில் ஒரு செங்குத்துக் கோட்டினை நெட்டுக்காக வரைந்துவிட்டு,

அடுத்ததாக ஒரு கிடைமட்டக் கோடு அல்லது படுக்கை கோட்டை வரைந்து கொள்ளவும். கோடுகள் எவ்வளவு வரைகிறோமோ அவ்வளவுக்கு கை பழகும். அலுங்காமல் குலுங்காமல் பொறுமையாக ஒவ்வொரு கோடுகளையும் வரையலாம். அழகாக!

அடுத்து வலது மற்றும் இடது பக்க சாய்வுக்கோடு..




இப்போது ஒவ்வொரு கோடுகளையும் கீழ் காணும்படி கோட்டால் இணைக்கத் தொடங்கலாம்..

சிலந்தி வலை போலத் தெரிகிறதா, இருக்கட்டும்...
இந்தக் கோடுகளுக்கு இணையாக அடுத்தடுத்தக் கோடுகளையும் வரையலாம்..



இப்பாது முழுமையாக ஒரு சிலந்தி வலை பின்னிவிட்டாம், இருக்கும் இடத்தை ஏன் சும்மா விட வேண்டும். கிடைக்கும் இடத்தில் எல்லாம் கோடுகளை நீட்டலாம் சுறுக்கலாம் கிறுக்கலாம்..




நமக்குத் தோன்றும் விதத்தில் கோடுகளை உருவாக்கிச் செல்வதன் மூலம் புதுப்புது வடிவமைப்புகளை உருவாக்கி மகிழலாம். இங்கு வரையப்பட்டுள்ளது போலவோ அல்லது உங்களுக்கு பிடித்த வடிவிலோ கோடுகளால் இந்த சிலந்தி வலையினை நிரப்புங்கள்.

கோடுகள் இத்தோடு முடிவதில்லை அது நீளும் பாதை முற்றுபெறாதது, இன்னும் கோடுகளை நிறையவும் நிறைவாகவும் இழுத்துச் செல்வோம்.

இது குழந்தைகள் பெரியவர்கள் யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யக்கூடியது, உங்களுக்கோ குழந்தைகளுக்கோ ஏதேனும் வினாக்கள் இருப்பின் பின்னூட்டத்திலோ கீழ்கண்ட மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம்.


மின்னஞ்சல்: rajjeba@gmail.com

கற்பனை வெளி:
தமிழ் சொற்களில் பெரும்பான்மையானவை காரணப் பெயர்களாகவே தோன்றுவது ஏன் எனத் தெரியவில்லை.

கோடு என்ற சொல்லுக்கு எப்படி அந்த பெயர் வந்திருக்கும் என வினா எழும்பியதும் அதற்கான மூலத்தைத் தேட முயற்சித்தேன், ஒரு கற்பனை சிந்தனைக்கு எட்டியது. ஒரு சிறுவனிடம் அது பற்றிக் கேட்டதும், கோட்டிற்கு கோடே கோடு எனப் பெயர் வைத்திருக்கும் என்று சொன்னான். அடடா என்றிருந்தது. 

உங்களுக்கு என்ன கற்பனைத் தோன்றுகிறது என்பதை பின்னூட்டத்திலோ மின்னஞ்சலிலோ உரைக்கலாம்.
இல்லையென்றால் எனது கற்பனைக்காக காத்திருக்கலாம்.








 



கருத்துகள் இல்லை: