புதன், 29 மே, 2024

வரைதலின் கிளர்ச்சி

சுமையாக இருக்க ஏதோவொன்று 
தேவையாகிறது 
நேரங்களில் வீடு

நீரிலா நிலத்திலா
எங்கிருந்து எழுவது
எழுகையில் பின்னணியில் இருக்க வேண்டியது 
பூக்களா இலைகளா 
இவை போன்ற ஏதோவொன்றா


வெள்ளையோ வேறு ஏதேனும் வண்ணமோ 
என் தூரிகையோ தூவல் மையோ 
அதனை கொலை செய்யட்டும் 


 

வியாழன், 23 மே, 2024

அக்கா குருவி 2




காட்டில் 
வீட்டில் 
வெளியில்
மழையில் 
வெயிலில்
குளிரில் 

கவிதையில் 
கதையில் 
இசையில் 
ஓவியத்தில் 
சொல்லில் 
செயலில் 

எதில்தான் என்ன இருக்கிறது 
சன்னலோரப் பயணம் போல்
வேடிக்கைப் பார்த்திருப்போமா
அக்காக் குருவியே

புதன், 22 மே, 2024

அக்கா குருவி 1

காலப் பயணத்தில் 
முளைத்து 
தழைத்து 
உதிர்ந்து 
சருகாகிக் கரைந்து போவதை 
பார்த்திருப்பாய் தானே
அக்கா குருவியே 

புதன், 15 மே, 2024

உறுப்புகள்

கனவில்
நாம் இல்லை 
பூக்கள் 
புயலைக் காற்றாகப் பார்க்குமா
ஏன் உறுப்புகள் 
இத்தனை உக்கிரமாக இருக்கிறது 

நரைக்கும் பொழுது

இரவு வெளுத்து 
நரைக்கும் பொழுதில் 
விடியல்