புதன், 30 டிசம்பர், 2015
டார்வின் ஸ்கூல் - வாசிப்பு
புதன், 16 டிசம்பர், 2015
இருண்ட நூலகம் - சிறுகதை
வியாழன், 26 நவம்பர், 2015
லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்
செவ்வாய், 24 நவம்பர், 2015
ஆரண்யம் (முதல் பாகம்) - வாசிப்பு
சனி, 31 அக்டோபர், 2015
ஞாயிறு, 25 அக்டோபர், 2015
சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம்
சனி, 24 அக்டோபர், 2015
ட்ராயிங் வெளாடலாமா
நோக்கில் வந்தவன் அப்படிக் கேட்டான். கரிக்கோலும் காகிதமும் கொடுத்து வரையச் இல்லை விளையாடச் சொன்னேன்.
சனி, 17 அக்டோபர், 2015
மாலைப்பொழுதின் நிறம் - சிறுகதை
தலைக்குமேல் கொடூரமான பழகிப்போனதொரு பெருத்த சத்தத்தோடு, உண்மையிலேயே விமானமொன்று பறக்கத்தான் செய்தது. மனதைத் தொலைக்கும் கேள்வியை அதில் ஏற்றி விட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருந்தேன், அதன் வேகத்தைப் பொருத்து அதன் அளவு குறைந்தது போலவே தன் போலியான நிறத்தை விடுத்து பொதுவான நிறத்தை பூசிக்கொண்டு துகள் அளவுக்கு சிறுத்தது. அதற்குமேல் இல்லாமல் போனது. அது தொலைந்து போனது என்றுதான் என்னால் சொல்லமுடியும்,
வியாழன், 8 அக்டோபர், 2015
சுந்தர ராமசாமி - கற்றலின் வழி
வியாழன், 1 அக்டோபர், 2015
விகடனுக்கு ஒரு திறந்த மடல்
திங்கள், 28 செப்டம்பர், 2015
தொலைந்துவிட்டது என்பார்கள்
ஆலங்குளம் என்றதும் சிலர் நினைவில் வந்தார்கள். அவரிடம் எதுவும் கேட்காமல் பார்த்துக்கொண்டே நின்றேன். "அக்கவுன்ட் நம்பர் குடுங்க திரும்ப அனுப்பி வைக்கிறேன்" என்றார். "அதெல்லாம் முடியாதுங்க" என்று கையை ஆட்டிவிட்டு நகரும் போது மீண்டும் மறித்தார். அந்த நேரத்தில் நூறு ரூபாயா இருக்க வேண்டும் சட்டைப் பையில், கொடுத்துவிட்டேன். "இன்னும் இருநூறு ரூபாய் குடுப்பா பஸ்ல போயிருவேன்" என்றதும் நான் நிற்கவேயில்லை வேகமாக நடக்க ஆரம்பித்தேன். கிடைத்தது போதுமென அவரும் வேறொருவரை தேடுவதுபோலத் தெரிந்தது. திரும்பிப் பார்த்துவிட்டு நடந்தேன்.
ஞாயிறு, 6 செப்டம்பர், 2015
கொல்லைக்கி போனியா குத்தைக்கெடுக்க போனியால
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015
நவீனநகரமெனும் உலகமகா புழுகல்
நகரத்து சுவர்கள் அனைத்திலும் "நவீன நகரம் தந்த நமோவே அம்மாவே" என்றும் இன்னபிற அரசியல் வியாதிகளை, சினிமா போலி புரட்சியாளனை தாங்கி ஒட்டிக்கொண்டிருக்கும் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தடை உருவாகுமா? அதற்கு சாத்தியமுண்டா நவீன நகரத்தில்?
திங்கள், 24 ஆகஸ்ட், 2015
மரணத்திற்கான வீதி
புதன், 29 ஜூலை, 2015
இல்லை போன்றதொரு விளைவு
ஊழல் இல்லை
கற்பழிப்பு இல்லை
களவு இல்லை
கள்ளக்காதல் கொலை இல்லை
சாதீய கொலை இல்லை
கௌரவக்கொலை இல்லை
பள்ளிகள் அலுவல்கள்
திரையரங்குகள் கடைகள்
நாளை மட்டும் இல்லை
இல்லை
இவையெல்லாம்
இல்லை போன்றதொரு விளைவு
நாளையும் இப்படித்தானிருக்கும்
எதுவுமில்லாமல்
நாளை மறுநாள்முதல்
இல்லை
அதற்கும் மறுநாள் முதல்
எல்லாம் இருக்கும்
அதுதானே வேண்டும் நமக்கு
ஆனால்
அவரின் ஆன்மா
எவரையும் பழிக்குமா எனக்கேட்டால்
தெரியாது..
புதன், 22 ஜூலை, 2015
எல்லாமே இல்லைதான்
மழை பெய்கிறது
கவிதை உருவம் பெறவில்லை
அத்தனைத் துளிகளும்
எழுத்துக்களாய்
உடலில் படர்ந்து
தரையில் ஊர்ந்து போகிறது
அவற்றைக் கோர்த்து
கவிதையெனும் கதவடைக்க விருப்பில்லை
குப்பை கொட்டியவர்களெல்லாம்
கதவடைத்து மூக்கடைத்து
நிற்க
சாக்கடை நாற்றம்
அன்னமாக மாறிவிட
மழைத்துளியின் மணம்
நாசியில்
இன்று சாளரம் சாத்திவிடலாம்
குளிருமில்லை கொசுவுமில்லை
எல்லாமே இல்லைதான்
இரவு இல்லையென்றால்
காலையும் இல்லைதான்
மழை
பெய்வதுபோல் பெய்கிறது
சனி, 4 ஜூலை, 2015
கவனம் கொள்வோம்
சில கேள்விகளோடு
இலைகள் இரண்டு
உரையாடலில் இருந்தன
அதன் கால்கள் இரண்டும்
கேள்வி கேட்கவும்
பதில் பெறவும்
புணர்ச்சி அடையவும் முடிந்தது
வெள்ளி, 3 ஜூலை, 2015
தனிமையில்தான் இருக்கிறேன்
சிலர் ஞாபகத்தில் வருகிறார்கள்
சிலர் மேலே பறக்கிறார்கள்
வியாழன், 25 ஜூன், 2015
இரத்த வேட்டை
புதன், 24 ஜூன், 2015
புதுமைப்பித்தன்
எழுத்தாளர், தமிழ்ச் சிறுகதையின் நாயகன் புதுமைப்பித்தன் அவர்களின் பிறந்தநாள் நாளை.
அவரை வாசித்த எனக்கு எழுதத் தோன்றியதை எழுதினேன், இன்று வரையத்தோன்றியது வரைந்து பார்த்தேன்.
புதன், 17 ஜூன், 2015
புதுமைப்பித்தனை நாடலாம்.
புதுமைப்பித்தனின் சாமியாரும் குழந்தையும் சீடையும் என்ற சிறுகதைத் தொகுப்பு, விகடன் வெளியீட்டில் வந்தது. அவர் சிறுகதை எழுத ஆரம்பித்தால் ஒரே மூச்சில் எழுதி முடித்துவிடுவார் என்று படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் துன்பக்கேணி எனும் அவரது சிறந்த கதையொன்று இருக்கிறது.
அவர் எனக்கு அறிமுகமானது துன்பக்கேணி கதைத் தலைப்பின் மூலம்தான், நான் கதைகள் வாசிக்க ஆரம்பித்த போது சுஜாத்தாவைத் தவிர வேறு எந்த எழுத்தாளரையும் அறிந்திராமல் இருந்தேன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆனவர்தான் புதுமைப்பித்தன்.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தை முன்னிருத்துகிறது, திருநெல்வேலிக்காரர் எனத் தெரிந்தபிறகு கூடுதல் மகிழ்ச்சி.
துன்பக்கேணி என்ற வார்த்தை அல்லது தலைப்பு அறிமுகமானதிலிருந்து சரியாக ஒருவருடத்திற்கு பிறகுதான் அந்த கதையை அண்ணா நூலகத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரது எழுத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் , கதையின் ஆரம்பத்தில் கிராமத்தின் நில வர்ணணை அமையும்போது தடுமாற்றம் ஏற்பட்டது உண்மை. கதையின் போக்கு இலங்கையின் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச்சென்ற தமிழக மக்களின் வாழ்வியல் துன்பங்களில் நகரும் போது ஏற்பட்ட வலியும், அவர்களின் மாறாத தொடரும் நிலையும் மனதை பிசைந்தது.
கதை வாசிப்பின் இடை இடையே பரதேசி படக்காட்சிகள் ஒத்திருந்ததை உணரமுடிந்தது. படக்குழுவினர் இந்தக் கதையை வாசித்திருக்க கூடும்.
இரண்டாவது முறை வாசிக்கும் பொழுதில் அதிக சிக்கல் இல்லாமல் இருந்தாலும், இருந்தது. அவரது பெரும்பாலான கதைகளில் இதை உணரமுடிந்தது, என்னளவில்.
இன்று காஞ்சனை என்ற கதையை இரண்டாவது முறையாக வாசித்தேன், காஞ்சனை தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்கும் போதுதான் இதை எழுதினேன். அளவான கேலி, மன ஓட்டம், இருட்டில் தொலைந்துபோகத் துடிக்கும் மனதோடு, எழுத்தாளனின் பிழைப்புவாதம், தற்புகழ்ச்சி அத்தனையையும் பேசுகிறார். தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை யாரிடம் சொல்வது என்ற ஏக்கம், மனைவியை காப்பாற்ற வெளிப்படுத்தும் மனோபாவம். இத்தோடு சரித்திர சாசனங்கள் என்ற ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும் போது திகில் ஏற்படுத்துகிறார்.
இந்த ஆம்பிளைகளே இப்படித்தான் என்று அவரது மனைவி கூறுவதற்கு, என்ன பதில் சொல்ல என்று முடிக்கிறார் கதையை.
கதையில் புதுமையை கற்றுக்கொள்ள புதுமைப்பித்தனை நாடலாம்.