சனி, 28 டிசம்பர், 2013

மறுமொழி பேசுங்கள் தலைவர்களே..

மறுமொழி பேசுங்கள் தலைவர்களே..

எம்மீனவ மக்கள்
துப்பாக்கிச் சூட்டால்
வெந்துச் சாவும் நிலைகண்டு
எழும்பாத உமதுகுரல்

எமது தங்கையர்
உடல் சிதைந்த நிலைகண்டு
எழும்பாத உமதுகுரல்

இன்று கோடிகளில் புரளும்
தேவியவளின் நிலைகண்டபொழுதில்
வெகுண்டெழுந் துள்ளீரே?

அந்நிய நாட்டில் துயர்
கொள்வது உமது
உறவானால் (இந்தியரானால்)

அண்டை நாட்டில்
சீரழிந்து கொண்டிருக்கும்
என் சொந்தங்கள்
உமக்கு (இந்தியா)
உறவற்று போயினரா?

அந்நியர்கள் நிறைவேற்றும்
தீர்மானத்தைக் கூட
போராடி உம்மை (இந்தியா)
பணியவைக்கும்
இத்திருநாட்டின் போர்வையை விலக்கி
விடுமைய்யா அரசியல்
வித்தகர்களே!!

பொது அரசியல் போர்வை
அணிந்திருக்கும்
தமிழ் அரசியல் வித்தகர்களே
கண்டிப்பதை நிறுத்தி
கட்டாய மொழி பேச
பழகுங்கள்...

வியாழன், 26 டிசம்பர், 2013

எண்ணங்கள் !

விண்ணில் விந்தைகள் பல
ஆயிரம் உள்ளனவே!

என் எண்ணங்களும்
நட்சத்திரங்கள் போல்
எண்ணிலடங் காயினவே

திங்கள், 23 டிசம்பர், 2013

தொடு திரை..

தொடு திரை..

தொடு திரையும்
தொட்டாச் சிணுங்கிபோல்
சுருங்கிப்போகிறது
உன் விரலின் வெக்கையால்..

வெள்ளி, 20 டிசம்பர், 2013

மதுபானக்கடை...

கடை இக்கடையினால் 
வாழ்வின் கடை 
நோக்கி பயணப்படுகிறான்
தமிழன்!

வீரத் தமிழனுக்கு
பெண்ணடிமைத்தனமும்
போதைக் குடித்தனமும்
வீரமாகிப்போனதே
ஐயகோ!!

வியாழன், 19 டிசம்பர், 2013

உணர்வுகள்..

உணரத் தோணவில்லை
நினைந்து கிடக்கவில்லை
உற்று நோக்கியதுமில்லை
உச்சி நுகர்ந்ததுமில்லை

நினைந்து நனைந்துதான்
போனேன்
உனையுணர்ந்தபோது

விலகிச்சென்றிருந்தாய்!!

புதன், 18 டிசம்பர், 2013

எதிர்பாரா வருகையானது!!

வருவாயென நினைக்கயில்லை..
நீங்கிவிட்டாய் என் நினைவிலிருந்தென
கடந்துபோன போது..
தீப ஒளியும் மங்கிப்போகும்.
முகம் தோன்றியது
என் கண் முன்னே..
சொல்லேதுமற்று பார்வை
தூவிச்சென்ற பாவையவள்..

செவ்வாய், 17 டிசம்பர், 2013

தந்தையுடன் எனது நாட்கள்..

தந்தையுடன் எனது நாட்கள்..

எனை
எவ்விதம் கொஞ்சி
மகிழ்ந்திருப்பாய் !!
என் பாலன் பருவத்தில்
என் தந்தையே !

மிதிவண்டியில்
அமர்த்தியழைத்துச்
சென்றதாய் ஞாபகம்
என் தந்தையே !

என் விடியலுக்குமுன்
உனது விடியல் தொடங்குவதும் !
என் இரவிற்குப் பின்
உனது இரவு அமையப் பெற்றதுமாய் !
உழைப்பால்
காலத்தை கதியற்றதாக்கிய
என் தந்தையே !

சனி ஞாயிறுகளில்
மிகையன்பறியச்செய்தவனே
என் தந்தையே !

விடலை பருவத்தை
சொல்லால் செதுக்கிய !
சித்திரையில் அவதரித்த
செம்மானே
என் தந்தையே !

நட்சத்திர ராசிகளின்
கூற்றினை
வென்றெடுக்க முயற்சித்தவனே
என் தந்தையே !

மிதிவண்டியில்
உன்னைப் பின்னமர்த்தி
நான் செலுத்திய
நாட்களை நினைந்தேன்
என் தந்தையே !

மொழியறியா தேசம்
பயணிக்க பணித்ததென்ன
காலமா?
காலத்தை கட்டியிழுக்காமல்
கட்டவிழ்த்துவிட்டேனோ
என் தந்தையே !

உன்னை காணப்
பொருளாகிப் போன
என்னை
உன் சொற்களும்
மூச்சு காற்றும்
வழி நடத்திக்கொண்டிருக்கின்றன
என் தந்தையே !!!

வெள்ளி, 13 டிசம்பர், 2013

பூனையபிமானம்...

இரு பூனைகள்
ஆபத்தில்!
கடந்துபோகிறான் மனிதன்..

ஒரு பூனை
ஆபத்து அறிந்து!!
அவ்விடம் செல்கிறது..

சனி, 7 டிசம்பர், 2013

களவாடிய பொழுதுகள்

களவாடிய பொழுதுகள்

களவாடிய பொழுதுகள்
வரம்பல பெற்றவைதான்!

களவை மீட்டக் காதலான
உறவு கிடத்தமிகு யேது?

உறவுதன்னை உணர்ந்திடத்தானோ
கவிதையிலக்கணம் அறிந்தேன்
கார்மேக ஓட்டத்தில் எண்ணங்கள்
ஓவியமாகக் கண்டேன்
சிலை செதுக்கும் நேர்த்தியுணர்ந்தேன்
காதல் குறள் வடித்தேன்
பாரதியின் புதுமைப் பெண் கண்டேன்
தவழும் குழந்த்தை யாகிப்போனேன்

இவ்வன்பறம் அறிந்த னான்
எய்த அன்பெனும் அம்பு முத்தமிடாமல் இறந்ததோ?
அம்பெய்வதறியா வில்லவனா கிப்போனேனா?
களவினை மீட்ட முனைந்தது குற்றமானதா?

களவினை மீட்டும் களவாடிச் செல்லதிரு..

தொலைந்த்துபோன புத்தகநிலையம்

தொலைந்த்துபோன புத்தகநிலையம்

வாடித் தான் போனேன்!!
தேடித் திரிந்த புத்தகநிலையத்தால்..

மலை காடுகளில் குறிஞ்சிப்பூ மலரலாம்
ஐயகோ!!!

மதுபானகத்தின்
குளிர்பானகத்தின்
அலங்கார நிலையத்தின்
மருத்தகத்தின்
ஆடையகத்தினூடே
இப்புத்தக நிலையங்கள்??

நெஞ்சுபொறுக்குதில்லையே
இந்நிலைகெட்ட மாந்தரை நினைக்கையிலே..

வெள்ளி, 6 டிசம்பர், 2013

நாம் மூடர்தான்..

நாம் மூடர்தான்..

விஷம் கொண்ட கோலா அருந்தும் மூடர்தான்.
வாய் கிழிய பர்கர் உண்ணும் மூடர்தான்..
இனம் புரியா மூடர்தான்...
அரசியல் கட்சியின் கொள்கை விளங்கா மூடர்தான்....
பொழுதுபோக்கை வாழ்வியலாக்கும் மூடர்தான்.....
குடிபோதையில் கோழையாகும் வீர மூடர்தான்......

இன்றைய இந்தியர்களும்,,, முந்தைய தமிழர்களும்!!
நாளைய எவரோ??

அழிந்து போன உறவு..

அழிந்து போன உறவு..

கனவுதன்னைக் கடந்து வந்தோம்
நினைவுகளோடு பழகித் திரிந்தோம்
திரைப்பாடலினுடே காவியக் காதல் பழகினோம்
நம்மில் ஒருவரையொருவர் மறவா
வரம் வேண்டிச் சன்னதிகள்பல சுற்றித்திரிந்தோம்
நெற்றிப்பொட்டில் உறவினை பதிவு செய்தலானோம்...

சென்ற திசையெங்கும் மறுநோக்க மறுதலிக்கிறது
மனசு
மருதாணி பூசிய கை யிணைவில்லாது
கனவுகள் ஒளி பெறவில்லை
நினைவுகள் நெஞ்சில் மட்டும் நிறைய
பாடல் மெல்லிசையற்ற வெற்றுக் காற்றானது
காணப் பொருளானான் வரங்கொடான்..

அழவில்லை வானமும் நீயும்
அழிந்து போய்விட்டது உறவு மட்டும் இன்று.....

இறந்தவனுக்காக...

இறந்தவனுக்காக...

வாழ்க்கையை
வாழும் பொழுதுகளில்..
வாழ்த்திடாத..
இம்மாமனிதர்கள்
சாவிலும் சடங்குகளிலும்
சாதிக்கப்..
போவதென்ன?

தோல்வியும் வெற்றிபெற்ற நாட்கள்...

தோல்வியும் வெற்றிபெற்ற நாட்கள்...

எனது விடியல்
உனதானதாகக் கருதப்பெற்ற
பள்ளிப் பருவநாட்கள்!!

உனதழகிய சிரிப்பையும் அழுகையையும்
காணக் கிடைக்க யிலவில்லை..

எனது அந்நாட்கள் வெற்றியடை யாவிடிலும்
உனைக் காண்பதே வெற்றியாய் கருதப்பெற்றன!!

வெகுநேரம் உரையாடிக் கண்டதில்லை!
உனை புரிந்து கொண்டதுமில்லை - ஆனால்
என் மனம் படபடத்ததன்பே
உனைக் கண்ட இப்பொழுதில்...
தோல்வியும் வெற்றிபெற்ற நாட்கள்...
காணா இருவருடம் கடந்த பின்னும்!!

வியாழன், 5 டிசம்பர், 2013

நாட்குறிப்புகள்

நாட்குறிப்புகள்

எனது கிறுக்கல்களின் ஆரம்பம்,,
சற்று வெற்றிடமாகவே இருக்கும்
அது தனை ஏற்புடையதாக மாற்ற
எடுக்கப்படும் ஒரு முயற்சியே
இந்த நாட்குறிப்புகள்

சிறப்பில்லாமல் தொடங்கிய இம்முதல்நாளை
சிறப்பான கடைசி நாளால் மீண்டும்
வரவேற்கவே இது.........

மாநகரத்தில் மரணம்?

மாநகரத்தில் மரணம்?

மரணம் கூட!
மௌனமாய் கடந்து போகிறது..
இம்மாநகரத்தில்!!

ஒப்பாரி இல்லாது..
உறவுகளின் உரசல் இல்லாது..

நினைவுகள்!!!!

நினைவுகள்!!!!

என்னால் உன் நினைவுகளை மறப்பது கடினம்தான்!!!
ஆனால் மறக்கும் அளவுக்கு என் நினைவுகள் உன்னிடத்தில் இல்லை..

நீ துயர் கொள்ளும் இக்கணத்தில் நானும் துயர் கொள்கிறேன்...

என் நினைவுகளை உன்னில் விதைக்க மறந்ததற்கு!!!
எனதாகியிருப்பாயோ எனதுயிரே!!!!!

என் நினைவுகளை விதைத்திருந்தால்......

தமிழன்??

தமிழன்??

இறப்பு கூட டெத் ஆகி விடுகிறது!!!
தமிழனின் வார்த்தைகளில்!!!

மார்கழித் துயில்!!!!

மார்கழித் துயில்!!!!

கோழி கூவி துயிலெழுந்த காலம் போயிற்று !!!!
கடிகாரம் கூவி துயிலெழுந்த காலமும் போயிற்று !!!!
கைப்பேசி கூவும் இந்த மார்கழி பணியில்...
உன்னை எழுப்ப நான்கு கைகள் இருக்கலாம்!!!!
நூறு இருநூறு எண் பதிவுகள் இருக்கலாம் - ஆனால் !!

நீ நினைத்தால் மட்டுமே உன் விடியலை தீர்மானிக்க முடியும் ....

எழுந்துவிடு என் நண்பா....