திங்கள், 20 பிப்ரவரி, 2017

அரசியல்வாதிகளின் அந்தரங்கம்

நேற்றுவரை எதிர்த்தவர்கள் இன்று புகழுரைக்கிறார்கள், எது நல்லது எது கெட்டது என்பதெல்லாம் கரை சென்றுவிட்ட காலத்தில் குறைந்தபட்சம் என்ற சொல்லாடல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. குறைந்தபட்ச மக்கள் நலன், குறைந்தபட்ச பகுத்தறிவு இப்படி சிலபல உண்டு. இப்பொழுது அதுவும் இல்லை நேற்று ஏமாற்றியவன் இன்று ஏகநாயகன் ஆகிறான்.

அரசியல் பேசுவதென்றாலே அரசியல்வாதிகளைப்பற்றி பேசுவது என்றாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் மக்கள் நலன் என்பதை மக்களே ஏற்றுக்கொள்ளாத ஒரு முட்டாள் சமூகம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. எல்லாம் பணம் எல்லோரும் கொள்ளையர்கள் இங்கே யாரும் விதிவிலக்கல்ல. மக்கள் மக்களாக இல்லை கட்சியவாதியாக, பச்சோந்தியாக, போலியாக வாழ்கிறோமென்று பிழைப்புவாதத்தில் புரள்கிறோம்.

அரசியல் பேசுகிறோமென்று அரசியல்வாதிகளின் அந்தரங்கங்களை வார்த்தைகளால் தொட்டு உணர்சிகளை வெளிப்பபடுத்திக்  கொண்டிருக்கிறோம் இவைகளே வரலாறாகவும் எழுதப்படுகிறது.

நூறு செயற்கைக்கோள்களை இராக்கெட் மூலம் விண்ணில் விடுவதெல்லாம் சாதனையா? சாக்கடைகளை, முறையான வடிகால்களை உருவாக்குவதன் தேவையை, தாம் வாழும் நிலப்பரப்பில் நீராதாரத்தை பேணுவதற்கு சிந்திக்காத மூளை நிலாவுக்கும் செவ்வாய்க்கும் இயந்திரங்களை அனுப்பி அங்கொரு இயந்திரங்களின் குப்பைத்தொட்டியை உருவாக்க எத்தனிப்பது ஏன்?

8 கருத்துகள்:

anwar basha சொன்னது…

பாண்டியனின் பக்கங்கள் அருமை. அரசியல்வதிகள்..... நீங்கள் சொல்வது உண்மைதான். மக்கள் சிந்திக்கும் ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறார்கள். நம்மை சுற்றி நிறைய மக்கள் இருக்கிறார்கள். ஒரு சில மக்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். மீதம் உள்ள பெரும்பான்மையான மக்கள் முகம் தெரியாத மனிதர்களை எல்லாம் வாழவைத்துவிட்டு அவர்கள் வெறுமனே பிழைத்து இருக்கிறார்கள்.

தங்கராஜா சொன்னது…

எதார்த்தம்.

K. ASOKAN சொன்னது…

நல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி

Pandiaraj Jebarathinam சொன்னது…

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி :-)

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி தோழனே.

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி தோழரே.

r சொன்னது…

மக்கள் மக்களாக இல்லை கட்சியவாதியாக, பச்சோந்தியாக, போலியாக வாழ்கிறோமென்று பிழைப்புவாதத்தில் புரள்கிறோம்.// அருமை...

K. ASOKAN சொன்னது…

நல்ல கருத்து க்கு மிக மகிழ்ச்சி