புலர்ந்த காலை பொழுதில்
புரியாத கால்களின் ஓட்டங்களுக்கிடையே
மூதாட்டி இவள்
காத்திருக்கிறாள் பேரூந்திற்கு..
மேகங்கள் பகலவனை மறைத்து
நிழல் பரப்பியிருந்த போது
அருகில்
அவளின் முதிர்ந்த கணவன்
கையிலிருந்த பூ மாலை
இவர்கள்
இழவு வீடு போகிறார்கள்
என்று அழுது கொண்டிருந்தது....
முழங்கால் சில்லு வலிக்க நிற்பவள்
கண்களை இறுக்கி
கைகளை கூப்பிய போது
மறுமொழியாய்
பகலவன் வெளிச்ச முகம்
பரப்பி மறைந்தான்....
ஈமக்கடனுக்கு போய்சேர
பேரூந்து கிடைக்கவேண்டுமென
இவள் வேண்டியிருக்க கூடும்...
புரியாத கால்களின் ஓட்டங்களுக்கிடையே
மூதாட்டி இவள்
காத்திருக்கிறாள் பேரூந்திற்கு..
மேகங்கள் பகலவனை மறைத்து
நிழல் பரப்பியிருந்த போது
அருகில்
அவளின் முதிர்ந்த கணவன்
கையிலிருந்த பூ மாலை
இவர்கள்
இழவு வீடு போகிறார்கள்
என்று அழுது கொண்டிருந்தது....
முழங்கால் சில்லு வலிக்க நிற்பவள்
கண்களை இறுக்கி
கைகளை கூப்பிய போது
மறுமொழியாய்
பகலவன் வெளிச்ச முகம்
பரப்பி மறைந்தான்....
ஈமக்கடனுக்கு போய்சேர
பேரூந்து கிடைக்கவேண்டுமென
இவள் வேண்டியிருக்க கூடும்...
10 கருத்துகள்:
நிழற் படமாயக் காட்சிதான் விரியக்
கவியாய்த் தந்த நிகழ்வு அருமை!
வாழ்த்துக்கள் சகோதரரே!
சோகத்திலும் ஒரு இதம் தங்களது கவி.
எனது ஹிந்தமிழ் காண்க...
வணக்கம்
கண்முன்னே காட்சிகள் கவியில் துலக்கம்..பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பர்களே...தொடர்ந்திருங்கள்...
வணக்கம்.தங்கள் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகி உள்ளது!
//http://blogintamil.blogspot.in/2014/07/welcome-and-farewel.html//
நன்றி!
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூவலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
அறிமுகப்படுத்தியவர்-மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை
பார்வையிட முகவரி-வலைச்சரம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களது பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.com
www.ponnibuddha.blogspot.in
மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!
நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ..இனம்புரியா சோகம் கவிதையில்...
வலைச்சரத்தின் அறிமுகத்திற்கும் நண்பர்களின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்..
கருத்துரையிடுக