செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நாஞ்சில் நாடனோடு ஓர் அறிமுகம்

வாசிப்பையும் வாசிப்பதையும் பற்றி பேசப்பேச ஆற்று மணற்பரப்பில் முழங்கை அளவு ஆழத்தில் நீர் சொரிவது போல உள்ளத்தில் உணர்வுகள் தீண்டப்படுகின்றது. கதைகளை வாசிக்கும் முன்னரே ஒரு சில எழுத்தாளர்களை பற்றி அவர்களின் பேட்டி வாயிலாக அறிந்து கொண்டதுண்டு இந்தவகையில் அறிமுகமான ஆளுமை நாஞ்சில் நாடன். இவருடைய எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கிய போது அவருக்குள் எழுபதுகளில் அடித்த பம்பாய் காற்று இரண்டாயிரத்தின் துவக்கத்தில் என் மீதடித்த மும்பைக் காற்றினை எந்த முன்னறிவிப்புமின்றி மீண்டும் மீண்டும் வீசச் செய்கிறது.
மிதவை என்றொரு புதினம். மும்பையின் மின்சாரத் தொடர்வண்டியின் இருக்கையில் அமர்த்தியும் ஆள் குறைந்த இரவில் அதன் வாயில் கம்பில் கைபிடித்து காற்றோடு முட்டிக்கொண்டு செய்யும் பயணத்தையும், நெருக்கித்தள்ளும் மனிதர்களையும், தொடர்வண்டி தளவாடங்களையும் மறுமுறை எனக்குள் நானே இந்த எழுத்துக்கள் கொண்டு எழுதிக்கொள்ள வரைந்துகொள்ள இயன்றது.


மழை வெள்ளத்தில் கரைந்து போகாமல் நனைந்து மிதந்த நூல்களில் மிதவை மிகவுவப்பானது. இன்றும் பூஞ்சை மணக்க என்னோடு இருக்கிறது ஊழிக்காலத்தின் வாடை போல.


உயிர் எழுத்து வெளியிட்டிருக்கும் இவரது சிறுகதை தொகுப்பு வாசித்துக் கொண்டிருக்கிறேன்.


எல்லோரும் ஒரே வாழ்க்கையைத்தான் வாழ்கின்றோம் இல்லை வாழ்ந்து தொலைக்கின்றோம். இது எவ்வளவு அப்பட்டமான உண்மை. 

6 கருத்துகள்:

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

இதன் பெயர்தான் இரத்தினச் சுருக்கம் என்பது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வரிகள்; ஆனால், மிகவும் கவித்தன்மை வாய்ந்த நடை! அருமை!

Yarlpavanan சொன்னது…

அருமையான பதிவு
தொடருங்கள்

http://tebooks.friendhood.net/

Pandiaraj Jebarathinam சொன்னது…

வாசிப்போம். நன்றி

Pandiaraj Jebarathinam சொன்னது…

தொடர்கிறேன். நன்றி.

நூல் தளம் பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

அருமை

ஜீவி சொன்னது…

புத்தக அறிமுகம்

'ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்று நான் எழுதிய நூல் ஒன்று.

மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம் பற்றிப் பேசும் நூல். சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

இந்த நூலில் நாஞ்சில் நாடன் உட்பட 37 தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் ஆழமாக அலசப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்தாளர்களின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் நூல் இது.

பக்கங்கள்: 264 விலை ரூ.225/-

சந்தியா பதிப்பகத்தின் தொலைபேசி எண்: 044- 24896979

ஜூன் 1-ம் தேதி துவங்கவிருக்கும் சென்னை புத்தகத் திருவிழா அரங்கில் சந்தியா பதிப்பகம் ஸ்டாலிலும் கிடைக்கும்.

உங்கள் வாசிப்பு ரசனைக்கு ஏற்ற நூல் என்பதினால் இந்தத் தகவல்.