ஞாயிறு, 13 டிசம்பர், 2020
ஒக்கிட்டுத் தாருமய்யா
சனி, 12 டிசம்பர், 2020
ஓவியம் பழகுதல்
சனி, 5 டிசம்பர், 2020
செவ்வாய், 6 அக்டோபர், 2020
வெள்ளி, 3 ஜூலை, 2020
திங்கள், 22 ஜூன், 2020
சனி, 23 மே, 2020
கோபுரம் - விமலாதித்த மாமல்லன்
ஒரு ஓவியனைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ கதையின் போக்குக்குள் இயல்பாக நுழைந்துவிட்ட மனம் பார்வையற்றவன் எப்படி வரைகிறான் என்றும் உழன்றது, பார்வையுள்ளவனை விட இவர்கள் நுட்பமானவர்கள் என எண்ணும் பொழுது கதையின் மாயம் மெல்ல விலகப் பார்த்தாலும் விலகுவதில்லை.
திங்கள், 18 மே, 2020
ஒளியிலே தெரிவது - வாசிப்பனுபவம்
ஞாயிறு, 17 மே, 2020
சைகை
வியாழன், 14 மே, 2020
சங்கச் சித்திரங்கள் - வாசிப்பனுபவம்
புதன், 13 மே, 2020
கதைகள் உருவாக்கும் பாதை
சனி, 9 மே, 2020
நினைவுகளின் சுவட்டில்
சனி, 25 ஏப்ரல், 2020
பால் பால்
ஞாயிறு, 19 ஏப்ரல், 2020
இது யாருடைய வகுப்பறை - வாசிப்பு
சனி, 11 ஏப்ரல், 2020
கொரோனா காலம்
வியாழன், 5 மார்ச், 2020
ஒட்டகம் கேட்ட இசை - வாசிப்பு
செவ்வாய், 3 மார்ச், 2020
சனி, 29 பிப்ரவரி, 2020
செவ்வாய், 25 பிப்ரவரி, 2020
குருவி மடம் - கசாரா
திங்கள், 24 பிப்ரவரி, 2020
வெள்ளி, 21 பிப்ரவரி, 2020
இரவு- வாசிப்பினிடையே
வாசிப்பு எதற்கென்று கேட்டால் அதுவொரு தேடுதலுக்கானது எதைப்பற்றிய தேடல் என்பது வாசகனின் எண்ண ஓட்டத்தை பொருத்து மாறுபடக்கூடியது. மிகச்சாதாரணமான மனிதனுக்கு தன் சுற்றத்தை நேசிக்க ரசிக்கத் தெரிந்தவனுக்கு தன் எதிரே புதிராக இருக்குமொன்றை அதாவது பெயர் அறியாத மலரினை அறிய முற்படுவதுபோலவும் நவீன ஓவியத்தின் உள்ளொளியை உணர்வதும் போலவுமான தேடல். தொழில் காரணமாக கேரளம் செல்லும் சரவணன் காயலுக்கு அருகிலுள்ள ஒரு புதிரான வீட்டு மனிதர்களை அறிய முயல்வதே தேடலின் தொடக்கம் அது இரவைப் பற்றிய தேடலாக தொடர்கிறது. ஓவியர் முகர்ஜி அறிமுகமாகும் இடத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓவியம் வரைய வேண்டுமென்ற எண்ணம் பீரிட்டு எழுகிறது.
நவீன ஓவியங்களை புரிந்துகொள்ள நவீன இலக்கியங்கள் வழிகோலும் என்பதை பிறழ்வின்றி நிகழ்த்திப்போகிறது இப்புதினம். ஒரு கீற்றிலிருந்து தொடக்கம் கொள்ளும் ஓவியம் பார்வையாளனை அடையும் பொழுதில் கீற்றுகளின் கோர்வையாகவும் உருவங்களை மீறி தனித்தெரியும் கோடுகளாகவும் சிதைந்து போவது நவீனத்தின் ஓட்டம். இரவுக்கும் பகலுக்குமான இடைவெளி எந்த வண்ணத்தால் கோடு கிழிக்கப்படும் அதுவொரு சாம்பல் நிறத்தினை ஒத்ததாக இருக்குமா
புதன், 19 பிப்ரவரி, 2020
முகங்கள்
வருணின் கீற்றுகள் |
குழு மற்றும் வரைய முன்வந்த நான்கு முகங்கள் |
அன்றைய பொழுதினை முடித்துக் கொண்டு காஃபி அருந்த சென்ற போது ராஜா முருகனும் எங்களோடு இணைந்து கொண்டார். பேச்சுகளுக்கிடையே முகேசின் வாழ்க்கை இன்னல்களையும், வரைதல் சார்ந்த அவரது தேடலும் புரிதலும் வியப்பும் ஆச்சரியமுமாக தொடர்ந்தது. இது தொடர வேண்டும்.
சனி, 15 பிப்ரவரி, 2020
இரயில் பயணத்தில்
செவ்வாய், 11 பிப்ரவரி, 2020
சனி, 8 பிப்ரவரி, 2020
செவ்வாய், 28 ஜனவரி, 2020
இது அத்திகாவாப்பா!!
திங்கள், 27 ஜனவரி, 2020
ஞாயிரோவியம்
ஓவிய நிகழ்விவை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்யும் சித்திரக்காரன் அண்ணனுக்கு வாழ்த்துகள்.
வெள்ளி, 24 ஜனவரி, 2020
நட்சத்திரவாசிகள் - வாசிப்பனுபவம்
இப்பணி சார்ந்த உட்கட்டமைப்புகளை, அதன் ஒவ்வொரு நிலையிலும் செயல்புரியக்கூடிய மனிதர்களைப் பற்றிய அவதானிப்பும் பண்புகளும் மிக இயல்பாக கூறப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. நேர மேலாண்மையில் இத்தொழிலில் பணி செய்வோரில் எவ்வளவு பேர் பின் தங்குகிறார்கள் என்பதை குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகவும் கவனத்திற்குரியது, குறிப்பாக வேலையை ஒதுக்கிவிட்டு விளையாடுவதும், சமூக வலைதளங்களில் பொழுதை கழிப்பதும் அல்லது வேலைகளுக்கிடையிலேயே (அப்படியும் ஆட்களுண்டு, ஒருவேளை காதில் பாடலோ வசனமோ ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டுமென மரபின் வழி, காடு கழனியில் வேலை செய்த நாட்டுப்புற மக்களின் பாடலிலும் பேச்சிலுமிருந்து நமக்குள் கடத்தப்பட்டிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது) செல்பேசியில் படம் பார்ப்பதும், பாடல் கேட்பதும், இயல்பாக மாறியிருக்கிறது, ஒரு நாளில் எத்தனை முறை நமது விரல்கள் செல்பேசியை தடவிக் கொடுக்கின்றன என எண்ணிப் பார்த்தால் இது விளங்க வாய்ப்பிருக்கிறது. இதுவொரு பொது நோயாகவும் மாறியிருப்பது வருந்தத்தக்கது.
சத்தியமூர்த்தியின் பழைய அலுவலகத்திலிருந்த பிள்ளையார் தற்போது சாய்பாபாவாக மாறியிருப்பதை பகடி செய்திருப்பது போன்ற சில காட்சிகளை நுட்பமாக அணுகவேண்டியிருக்கிறது. அதற்கிடையே "அவளால் வேலையை விட முடியவில்லை. குழந்தையை டே-கேரில் விட முடிந்தது" என்பது சினிமாத்தனமான வாசகமாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக கடந்து விட இயலாத இக்காலத்தின் மாற்றம். டீக்கடை பையனிடம் சிட்டையில் தான் கடனாக வாங்கிய பணத்தினை சாஜூ குறித்துக்கொள்ளச் சொல்லும் பொழுதில் "ஐ.டி வேலைய விட்டுட்டு பிரியாணி விக்கிறோம்" எனச் சொல்லி அலுவலகத்திற்கு முன் பிரியாணி விற்ற இருவர் நினைவில் வந்தார்கள். மணியின் கடை அரசாங்கத்தால் இடித்து நொறுக்கப்படுகிறது, காலம் யாரையும் ஓரிடத்தில் நிரந்தரமாக்கி அழகு பார்க்க எண்ணுவதில்லை மாறாக அது தன் நீண்ட தும்பிக்கையால் எல்லோரையும் அசைத்துப் பார்க்கிறது.
நாவலின் வடிவத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் கார்த்திக், உதாரணத்திற்கு, முப்பத்தியாறாவது அத்தியாயத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பிச்சைமணியோடு இரண்டாவது அத்தியாயத்தை முடிச்சிட்டிருப்பது. கடைசி அத்தியாயம் வாசிக்கும் பொழுதில் அது நம்மை முதல் அத்தியாயத்திற்கு அழைத்துச் செல்வதில் இருக்கும் சுழற்சி.
வாழ்வின் நிலையற்ற தன்மையின் காட்சிப் பொருளாகி நிற்கும் அத்தனை மனிதர்களும், இறுதியில் கனத்த அழுத்தத்தை மனிதில் இருத்துகிறார்கள்.