வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

இரவு- வாசிப்பினிடையே

வாசிப்பு எதற்கென்று கேட்டால் அதுவொரு தேடுதலுக்கானது எதைப்பற்றிய தேடல் என்பது வாசகனின் எண்ண ஓட்டத்தை பொருத்து மாறுபடக்கூடியது.  மிகச்சாதாரணமான மனிதனுக்கு தன் சுற்றத்தை நேசிக்க ரசிக்கத் தெரிந்தவனுக்கு தன் எதிரே புதிராக இருக்குமொன்றை அதாவது பெயர் அறியாத மலரினை அறிய முற்படுவதுபோலவும் நவீன ஓவியத்தின் உள்ளொளியை உணர்வதும் போலவுமான தேடல். தொழில் காரணமாக கேரளம் செல்லும் சரவணன் காயலுக்கு அருகிலுள்ள ஒரு புதிரான வீட்டு மனிதர்களை அறிய முயல்வதே தேடலின் தொடக்கம் அது இரவைப் பற்றிய தேடலாக தொடர்கிறது. ஓவியர் முகர்ஜி அறிமுகமாகும் இடத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓவியம் வரைய வேண்டுமென்ற எண்ணம் பீரிட்டு எழுகிறது.

நவீன ஓவியங்களை புரிந்துகொள்ள நவீன இலக்கியங்கள் வழிகோலும் என்பதை பிறழ்வின்றி நிகழ்த்திப்போகிறது இப்புதினம். ஒரு கீற்றிலிருந்து தொடக்கம் கொள்ளும் ஓவியம் பார்வையாளனை அடையும் பொழுதில் கீற்றுகளின் கோர்வையாகவும் உருவங்களை மீறி தனித்தெரியும் கோடுகளாகவும் சிதைந்து போவது நவீனத்தின் ஓட்டம். இரவுக்கும் பகலுக்குமான இடைவெளி எந்த வண்ணத்தால் கோடு கிழிக்கப்படும் அதுவொரு சாம்பல் நிறத்தினை ஒத்ததாக இருக்குமா

2 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

அவரவரின் மனவிருப்பத்தின் அடிப்படையில் அமைகிறது புத்தகத் தெரிவுகள்.  நீங்கள் இப்போது ஏதாவது குறிப்பிட்ட புத்தகம் பற்றிச் சொல்லி இருக்கிறீர்களா என்று தெரியவில்லை.

Pandiaraj Jebarathinam சொன்னது…

தேடல் என்பது பொதுவானது, எதை நோக்கிய தேடல் என்பது அவரவர் விருப்பமும் மனவோட்டமும் சார்ந்ததே, ஜெயமோகனின் இரவு புதினத்தை வாசிக்கையில் எழுதியது.