புதன், 29 ஜூலை, 2015

இல்லை போன்றதொரு விளைவு

இன்றோடு மூன்றாவதுநாள்

இந்தியாவைப்பற்றி யானறியேன்

தமிழகத்தின் செய்திகளில்

ஊழல் இல்லை
கற்பழிப்பு இல்லை
களவு இல்லை
கள்ளக்காதல் கொலை இல்லை
சாதீய கொலை இல்லை
கௌரவக்கொலை இல்லை
பள்ளிகள் அலுவல்கள்
திரையரங்குகள் கடைகள்
நாளை மட்டும் இல்லை 

இல்லை

இவையெல்லாம்
இல்லை போன்றதொரு விளைவு

நாளையும் இப்படித்தானிருக்கும்
எதுவுமில்லாமல்
இல்லாத அவரின் உயிர்போல

நாளை மறுநாள்முதல்

இல்லை
அதற்கும் மறுநாள் முதல்
எல்லாம் இருக்கும்

இருக்கட்டுமே
அதுதானே வேண்டும் நமக்கு

ஆனால்
அவரின் ஆன்மா
எவரையும் பழிக்குமா எனக்கேட்டால்
தெரியாது..

புதன், 22 ஜூலை, 2015

எல்லாமே இல்லைதான்

மழை பெய்கிறது
கவிதை உருவம் பெறவில்லை
அத்தனைத் துளிகளும்
எழுத்துக்களாய்
உடலில் படர்ந்து
தரையில் ஊர்ந்து போகிறது
அவற்றைக் கோர்த்து
கவிதையெனும் கதவடைக்க விருப்பில்லை

குப்பை கொட்டியவர்களெல்லாம்
கதவடைத்து மூக்கடைத்து
நிற்க
சாக்கடை நாற்றம்

அன்னமாக மாறிவிட
மழைத்துளியின் மணம்
நாசியில்

இன்று சாளரம் சாத்திவிடலாம்
குளிருமில்லை கொசுவுமில்லை

எல்லாமே இல்லைதான்
இரவு இல்லையென்றால்
காலையும் இல்லைதான்

மழை
பெய்வதுபோல் பெய்கிறது

சனி, 4 ஜூலை, 2015

கவனம் கொள்வோம்

கலவிக்கு முன்
சில கேள்விகளோடு
இலைகள் இரண்டு
உரையாடலில் இருந்தன
அதன் கால்கள் இரண்டும்
கேள்வி கேட்கவும்
பதில் பெறவும்
புணர்ச்சி அடையவும் முடிந்தது

வெள்ளி, 3 ஜூலை, 2015

தனிமையில்தான் இருக்கிறேன்

தனிமையில் இருக்கிறேன்
கவிதைகளை தேடுகிறது மனம்

சிலர் ஞாபகத்தில் வருகிறார்கள்
அதில் சிலர் வெண்மேகத்தில் 
ஒழிந்துவிட்டனர்
சிலர் மேலே பறக்கிறார்கள்
முகங்களை படம் பிடிக்க