செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கடலோர நீரோடு ..


 கடலோர நீரோடு

எண்ணமும்
எழுத்துக்களும்
ஏங்கிக் கிடக்கும்
மாலை வெயில் நேரம்..

கடல் காற்று
சுற்றி வளைக்க
மீனும் கருவாடும்
நாசி துளைக்க...

பாதங்கள்
ஓவியம் வரைந்து
அழகாக்கியது
மணற்பரப்பை...

கால் கொண்டு
நீரழந்து
கடல் ஆழம்
பார்ப்போமென
நான் கூற...

நீரென்றால்
உவப்பில்லை யென
நீ கூறினாய்...

நீரென்றால்
உவப்பில்லையோ..

என் உதட்டின்
நீர் பதம் பட்டால்
என்ன மொழிவாய்
கேட்கிறேன்.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..!

ஆப்பெரிக்க கண்டத்தில் உள்ள காமெரூன் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டு இருக்கிற மொழி தமிழ் என்று தெள்ளத் தெளிவாக

ஆய்வறிக்கையில் நிருபனமாகிவுள்ளது . இந்த ஆய்வறிக்கையை சமர்பித்த தமிழ் சிந்தனை பேரவையாளர் குழுமத்திற்கு நன்றி.

மேலும் அவர்கள் முயற்சிகளுக்கு துணை நிற்ப்போம் , பயன் பெறுவோம் .நன்றி:http://www.tamilmantram.com/vb/showthread.php/31711-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88?p=578272#post578272


சில துளிகள்..


இறைவனை
நேசிக்க
நல்லநேரத்தை விட
விடுமுறை
நேரம்தான்
உகந்த தாகிப்போனது

----------------------------------------

கரு வண்ணத் தாளில்
மறைந்து போன வெள்ளை
எழுத்துகள் - மின்னல்


----------------------------------------

விழியும் ஒளியும்
மோதும் நேரம்
வரும் பொழுது
இரவாகிப் போனது....


---------------------------------------

தூக்கத்தை
தொலைத்த இரவுகள்..
பகலாக
இருப்பதில்லை...

---------------------------------------

நீ என்னுடன்
இருப்பதற்கே காரணம்
நானாக இருப்பின்..
வேறு காரணங்கள்
தேடி நான்
அலைய வேண்டுமா??

---------------------------------------

எண்ணம் கொண்டு
எழுத நினைத்தால்
யோசனை செய்யென
முகம் மூடுகிறது
எழுதுகோல்...!

--------------------------------------

இயல்பாய்
இம்சை தரும்
இனியவள்
இனிய
இரவுக் குறியவள்.
நித்திராதேவி....

--------------------------------------

இமைகளின்
இறுக்கம் தளர்த்து
இன்ன லற்ற
இனிய பொழுதில்
கனவுகளை
அணி சேர்த்து
பயணிப்போம்.

-------------------------------------

சிலேடை சத்தங்களில்
சில்லரை வாகனங்களுடே
சிக்கல் மனதுடன்
சில மணித்துளி பயணம்..

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

வளர்ச்சியின் மாற்றம்


முழு நிர்வாணம்
முகப்பில் வந்துவிடா
எண்ணம் கொண்டு
வந்து விட்ட
முக்கால் நிர்வாணத்தை
கிழித்துவிட்டு
வழி நடந்து போனால்..

கிழிந்து
கையில் சிக்கிய
காகிதமோ கசங்கி
புழுங்கியது...
வளர்ச்சியின் மாற்றத்தில்
மறைக்கப்பட்ட
குப்பை தொட்டியால்.......

புகைப்படக் காரி ...!


முகம் மறைத்து
முக மெடுக்கும்
மென் விழியே
விட்டு விலகி நின்றே
மதி முகம் திறப்பாயோ..!!

புதன், 16 ஏப்ரல், 2014

சிவந்த வதனம் ...

கடற்க் கரையின்
மணற் பரப்பில்
குவித்து வைத்த மணலில்
சரியாக ஓர் அடி
இடை வெளியில்

வியாழன், 10 ஏப்ரல், 2014

அழிப்பது அழிவுக்காகத்தான்.. - சிறுகதை

எம் ஏ ஆர் கன்ஸ்ட்ரக்சன் என தங்க நிறத்தால் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அந்த சொகுசு நான்கு சக்கர வாகனத்தின் முன் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாகனம் வருவதை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிந்தது அது புதிதாக வாங்கப்பட்டது என்றும் அதை ஒட்டி வருபவர் முறையான பயிற்சி பெறாதவர் எனவும் தெரிகிறது. வாகனம் அருகே வர வர சற்று உள்நோக்கும் போது பின் இருக்கையில் இரு சிறார்கள், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மேலும் முன் இருக்கையிலும் ஒரு பெண் குழந்தை, இவர்கள் தன் அப்பா வாங்கியிருக்கும் புது வாகனத்தில் அமர்ந்து மகிழ்ச்சியை துள்ளலுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

கோடை விடுமுறையில் ஒருநாள்....!!


ஊதா மை நிரப்பி
தேர்வுத் தாள் பார்த்த
எழுது கோலில்...
வாழைக் கரை பிழிந்தளந்து
நண்பனின் சட்டையில்
நட் பெழுதி வைக்கும் நாள்

வியாழன், 3 ஏப்ரல், 2014

செங்கதிர்ச் சூரியனே ..!!கருமேக வண்ணக்
கோப்பை யிலிருந்து
எழுச்சிபெறும்
செங்கதிர்ச் செல்வனே !!

உடல் பரவும்
உற்சாக முடன்
ஒளி தந்து
விழி காப்பாய்
பகலவனே..!!


                                                                             -------ஜெ.பாண்டியன்

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ரெட்டை வால் குருவியே...!!ரெட்டை வால் குருவியே
ரெக்கை விரித்து வந்துவிடு !!

உயர வட்ட மிடும் பருந்துவே
உன் வட்டம் வந்தால் சொல்லிவிடு !!

தென்னை மரக் கிளைகளே
கூடு கட்டி வாழ்ந்தால் சொல்லிவிடு !!

மா மரத்து இழைகளே
கனி பறிக்க வந்தால் கூறிவிடு !!

ரெட்டை வால் குருவியே
ரெக்கை விரித்து வந்துவிடு !!                                                                             -------ஜெ.பாண்டியன்