செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கடலோர நீரோடு ..


 கடலோர நீரோடு

எண்ணமும்
எழுத்துக்களும்
ஏங்கிக் கிடக்கும்
மாலை வெயில் நேரம்..

கடல் காற்று
சுற்றி வளைக்க
மீனும் கருவாடும்
நாசி துளைக்க...

பாதங்கள்
ஓவியம் வரைந்து
அழகாக்கியது
மணற்பரப்பை...

கால் கொண்டு
நீரழந்து
கடல் ஆழம்
பார்ப்போமென
நான் கூற...

நீரென்றால்
உவப்பில்லை யென
நீ கூறினாய்...

நீரென்றால்
உவப்பில்லையோ..

என் உதட்டின்
நீர் பதம் பட்டால்
என்ன மொழிவாய்
கேட்கிறேன்.

3 கருத்துகள்:

Vimalan Perali சொன்னது…

இயற்கையின் மொழியை விடவா?

rathina thasan சொன்னது…

அழகு!!

rajjeba சொன்னது…

அதென்னவோ உண்மைதான்.....