புதன், 16 ஏப்ரல், 2014

சிவந்த வதனம் ...

கடற்க் கரையின்
மணற் பரப்பில்
குவித்து வைத்த மணலில்
சரியாக ஓர் அடி
இடை வெளியில்

அவளும் நானும்.....

அந்தி சாயும்
மங்கலான நிழல்
பரப்பும்
மாலை வெயில் நேரம்....

கடல் அலைகள்
எட்டிப் பிடித்து
தொடும் தொலைவில்
அமர்ந் திருந்ததால்...

தொடும் அலைக்கு ஒரு
முத்தமென
சூரியனின் மாலைச்
சிவப்பும் அற்றுப் போகுமளவு
சிவக்க வைத்தேன்
அவள் வதனத்தை...

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... ரசித்தேன்...

rajjeba சொன்னது…

நன்றி DD அவர்களே..