புதன், 26 பிப்ரவரி, 2014

வெல்க பாரதம் ..!!

நம் மீனவர்கள் கடலில்
சுடப் படுவதை கண்டுகொள்ளாத நாடு

இந்து-முஸ்லிமை விவாதத்துக்குள்
வைத்து அரசியல் செய்யும் நாடு

தமிழர்கள் மனதில் மெல்ல
கரைந்து கொண்டிருக்கும் நாடு

நீரும் நிலமும் கூட்டு நிறுவனங்களுக்கு
தாரைவார்த்த உயர்திரு நாடு !!!
இவ் விந்திய நாடு !!!!

வாழ்க பாரத நிலப் பிரபுக்களும்
இந்திய மேட்டுக்குடி மேன்மக்களும் !!!! 

மொழி இலக்கணம் வளர்ப்போம்..!!



அடக்கம் அது
நம்மை அடக்கம்
செய்து விடும்
நிலை கொண்டிருக்கிறோம்...?

மாற்றான் மொழி
மண்டிக் கிடக்கும்
மூளையை
மரபுக் கவிதை கொண்டு
மீட்டெடுப்போம்..!!

தமிழன்னையை போற்றி
இனிமையாய் இலக்கணம்
படைப்போம்...
வளர்ந்து ஓங்குக தமிழ்..!!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மௌன மொழி வேறு அல்ல ?!!


சுற்றிச் சுழலும் மாந்தர்களின் கண்கள்
சுருங்கியே குவிந்தன நடந்து வரும்..!?

நான்கு சிறார் அவர்கள் புறம்
நானும் விழியைக் குவித்தேன் சிறார்மீதே ?...

மௌன மொழி தெரித்தது வாசகமாக
மெல்லிய விரல்கள் தாளம் இசைத்தன..!!

கண்களும் இமைகளும் நடன மாட
கலவரமின்றி கருத்தரங்கு அரங் கேறியது...

வேடமிட்ட கண்களால்; மலர்ச்சி பெறும்
வேற்றுமை யிலா மலரின் தேனுக்கு...

வஞ்சகம் புரிந்திடாதீரும்; நா இழந்த
வல்லவரிடம் சிறுமை முகம் படராதீரும்...!

மண்ணில் வேண்டு வென கிட்டிய
மாந்தர்களே மாசு மன மாந்தர்களே!!

--------ஜெ.பாண்டியன்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பதுங்கிய சொல்கள்

என்னுள் பதுங்கிக்
கிடக்கும் சொல்களை
எழுத்தாக்கம் செய்யும் பொது
உணர்சிகள் பேனாவையும்
விசைப் பலகையையும்
விழுங்கி விடுகின்றன..!!


----ஜெ.பாண்டியன்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பூங்காவின் காலை பொழுதில் சில நொடிகள்

முன் காலையில்
தூவிய மழைத்துளிகள்
காலைப் பொழுதை
அழகாக்கி யிருந்தது...!

அமிழ்தம் தவழ்ந்த
மணற் பள்ளங்கள்
சிறு குட்டையாக
உருவகப் பெற்று
அழகியலை
தோற்றுவித்திருந்தன..!

சுற்றிலும் தொந்தி கணவான்கள்
தீராது உண்டு களித்ததை
தீங்காகக் கருதி
வருடும் மெல்லிசையுடன்
நடை பழகினர் !!

முதிர் குழந்தைகள்
மூச்சுப் பயிற்சியிலும்,
அடங்கா இரைச்சலுமாய்,
பேசுவதை விரும்பியே
நடையுடன் காலத்தை
வென்று கொண்டிருந்தனர்..!

ஆதவனின் புறங் கண்டு
மலரும் நகரத்து
மொட்டு போல்
சொற்பமாய் மலர்ந்திருந்தனர்
காதலர்கள்..!

பாவம் தீர்க்கும் மழைநீர்..!


வான மேகங்கள்
கருத்துப் போனதால்
இருண்டு போயிருந்தது
அண்டம்..!!

பிண்டங்கள் எதையெதையோ
எண்ணி அஞ்சி யிருந்தனர்
மின் தடைபட்ட
மாலைப் பொழுது
முழு யிரவாகிப் போனதுதான்.,
ஓடியாடும் சிறார்களும்
அடங்கிப் போனார்கள் ..!!

இதோ ..!
வசை பாடத் தொடங்கினான்
வருண பகவான் ..

கரு மேகங்கள்
ஒன்றையொன்று மோதிக் கொண்டு
பார்வையில் மின்னலாய்
வெளிச்சத்தை பரப்பியது !!

கோபத்தின் உச்சத்தில்
பனைமரமும் பச்சிலைகளும்
பற்றிக் கொண்டெரிந்தன..!

பிண்டங்கள் நிறைந்த
அண்டத்தின் பாவங்கள்
புறந் தள்ள விழுந்தது
மண்ணில் ஒருதுளி,
பலதுளி படர்ந்தன
மழையாய்!!!

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

சொல்லை உருமாற்றுங்கள் !!


காதலை 
கடிதமாக்கி 
மகிழ்வோம் அன்பர்களே !!

கைபேசியில் சொல் 
அளந்து பேசி 
காற்றில் சிதறிக்
கிடைப்பதைவிட 
எண்ணமும் நினைவுகளும் 
எழுத்துக்களாய் 

உருமாற்றி மகிழ்வோம் 
அன்பர்களே !!

புதன், 12 பிப்ரவரி, 2014

தொல்லைதான் கொசுவுக்கும்...!!


விடியாத
காலை வேளை
தூக்கம்
கடிக்கும் கொசுவிடம்
கேட்டேன் ..

ஏன் கடித்தாய்
என்னை..

கொசு உரைத்தது ...

கடிபட வேண்டிய
கள்வர்கள்
கடிவாள மிட்டுளனவே..!

நான் என்
செய்யேன்
பசி கண்
மறைக்கிறதே....?!

சனி, 8 பிப்ரவரி, 2014

காலை அடர் பனி ...

பச்சை
மறைத்து பரவியிருக்கும்
வெளீர் பனிக்
காலையில்
ஊடுருவிச் செல்லும்
கருங்காக்கை கண்
சிமிட்டச் செய்கிறது !

ஓடை யது
கிழிய லாடை
களைந்து
புத்தாடை யணிந்து
க்லக் க்ளக் ஓசையுடன்
மெல்லிய ஓட்டத்தில்
மெய் பூசுகிறது !!


+Tamil Kavithaigal, Kadhal Kavithaigal, Language School - Coimbatore +Tamil kavithai +Tamil Kavithaigal +TAMIL LANGUAGE +தமிழ் இலக்கியம் +தமிழ் ப்ளாக்கர்ஸ்

யாருமற்ற சாலை...



சாலையே !!
ஞாயிறு பார்க்காத
முன்காலைப் பொழுதின்
தனிமையில்
நீயும் நானும் !!

பனிக்காற்று..

பேரூந்தின்
ஜன்னலோரம் கடந்துபோகும்
பனிக்காற்று; மனதையும்
கடத்திபோகிறது..

கணினி காதல்!!

விசை பலகையில் 
விரல்கள் தேய !
விழி திரையால் 
ஒளி திரை பார்த்து 
காத்திருக்கிறேன் !
இயக்கு வரிசையில் 
இயங்கி விடு 
என் கணினிப் பெண்ணே!!

வியாழன், 6 பிப்ரவரி, 2014

நுளம்புவின் இறப்பில்

மின்சார மட்டையில்
மரித்துப் போகும் நுளம்பின்
குருதி நாற்றத்தில்
மூக்கடைப்பு....!

தலைவனுக்கு வருத்தம்......

நெஞ்சு பொறுக்க யில்ல அம்மாடி !
விட்டுநீ பிரிஞ்சி போவையில அம்மாடி !

நிலவ நீயுன்னு நினைச்சேன் அம்மாடி !
களவு கொண்டு போனியே அம்மாடி !

தோளுல சாஞ்சி சொன்னியே அம்மாடி !
காதல் காணாம போயிட்டே அம்மாடி !

மாமா மாமான்னு சொன்னியே அம்மாடி !
மறந்து என்ன போனியே அம்மாடி !

கூசுதுன்னு சொன்னியே கூசாம அம்மாடி !
கூட வரயில தெரியலியா அம்மாடி !

நாண்டுக் கிடத் தோணுதே அம்மாடி !
உன்ன நினைக்காம உசுருதங்குமா அம்மாடி!


+Tamil kavithai; +Tamil Kavidhaigal; +தமிழ் ப்ளாக்கர்ஸ

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

முதல் பயணசீட்டு

என் முதல்
நெடுந் தொலைவு
ரயில் பயணத்தின்
முதல் பயணசீட்டு.,
இன்று பார்வைக்கு
உகந்த வேளையில் ..

உறவுகளும்
நட்புகளும்.,
நினைவுகளின்
ஜன்னல் வழி
நிழற்ப் படங்களாய்....

பூ மலர்ந்தது ஏனோ !!?

தென்றல் தழுவிய
துணர்ந்து திசை
நோக்கினால்
புன்னகை பூத்து
மலர்ந்திருந்தது பூ
ஒன்று !!!

பூத்தது ஏனோ?
வினவு முன்
நேர் என்
கண் முன் னின்றது
பூ அது !!

இளம்புயல் வீசட்டும்..!!

நின் புயல்
இந்திய எல்லையில்
அடங்கிவிடாது
திரைகட லோடி
வீசவேண்டுவேன் !!

அடிப்படை
ஆதாரமின்றி தவித்துக்
கிடக்கும் கடைக்
கோடி மக்களை
காத்திட, அறைக்
கூவலிடும் வெள்ளுடை
வேடர்களை வேரறுக்கவும்
தயங்காது வீசட்டும் !!

கல்வி அது
சாத்தான் கை
நீங்கி, நல்லோர் கை
சேர்ந்திட வினை
புரிய வேண்டும்
நின் புயல் !!

இன்றைய கல்வி யற்று
சிறந்ததொரு
கல்வி யறிவை
மக்கள்தான் பெற்று
பகுத்தறிவுடன்
சாதியையும், மதத்தையும்
பிய்த்து எரியட்டும்
நின் புயல் !!

மிகையான ஏட்டுக்
கல்வி
மிகையான வரதட்சணை ?!
மிகையான அலுவல்
வெகுமதி
மிகையான வரதட்சணை ?!
இங்ஙனம் புதிய
பாதையில் வசூல் செய்யும்
நய வஞ்சகர்களை
வேரறுக்கட்டும்
நின் புயல் !!

லஞ்சம் ஊழல்
ஊதிப் பெருத்துள்ளது;
உற்றோன் துணை
கொண்டே
உதிர்த்து விடட்டும்
நின் புயல் !!

எட்டுத்திக்கும்
வீசட்டும் நின் புயல் !!
ஓயாது ஒலிக்கட்டும்
நின் குரல் !!
செழிக்கட்டும்
மக்கள் நலன் !!