செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பாவம் தீர்க்கும் மழைநீர்..!


வான மேகங்கள்
கருத்துப் போனதால்
இருண்டு போயிருந்தது
அண்டம்..!!

பிண்டங்கள் எதையெதையோ
எண்ணி அஞ்சி யிருந்தனர்
மின் தடைபட்ட
மாலைப் பொழுது
முழு யிரவாகிப் போனதுதான்.,
ஓடியாடும் சிறார்களும்
அடங்கிப் போனார்கள் ..!!

இதோ ..!
வசை பாடத் தொடங்கினான்
வருண பகவான் ..

கரு மேகங்கள்
ஒன்றையொன்று மோதிக் கொண்டு
பார்வையில் மின்னலாய்
வெளிச்சத்தை பரப்பியது !!

கோபத்தின் உச்சத்தில்
பனைமரமும் பச்சிலைகளும்
பற்றிக் கொண்டெரிந்தன..!

பிண்டங்கள் நிறைந்த
அண்டத்தின் பாவங்கள்
புறந் தள்ள விழுந்தது
மண்ணில் ஒருதுளி,
பலதுளி படர்ந்தன
மழையாய்!!!

கருத்துகள் இல்லை: