ஞாயிறு, 10 ஜனவரி, 2016

பத்து பைசாவும் கால அளவும்

இரண்டு பத்து, ஒரு இருபது பைசா நாணயங்களை கொண்டுவந்து "பத்து பிசாவ பாத்துருக்கியாடா" என்றாள். " நான் ஐஞ்சி பிசாவுக்கு அப்பளப்பூ வேங்கி தின்னுருக்கேம்ம" என்றேன். கையில் தந்துவிட்டு போனவள் திரும்ப வந்து இருபது பைசாவை பக்கத்து வீட்டு அக்கா அவங்க பையனுக்கு காண்பிக்க எடுத்துச் சென்றதாக கூறினாள்.
யாரேனும் சேகரித்ததோ, செல்லாக்காசு என்று விட்டெரிந்து மண்ணில் புதைந்து போனதோ தெரியவில்லை, தெருவிற்கு அழைத்து வந்திருந்தது மழை வெள்ளம். நன்றாக மண்ணில் ஊறிப்போய் தேயத் துவங்கியிருந்தது. ஒன்று 1986 மற்றொன்று 1987- ஆம் வருட நாணயங்கள். இந்த இடத்திலொரு கேள்வி, அகழ்வு செய்து எடுக்கும் பொருட்களின் காலங்களை எப்படி கண்டறிகிறார்கள்? அறிவியல்தான் காலங்களை வரையறை செய்வதில் முழுபங்கு வகிக்கின்றதென்பதை அறிவோம். பொதுவாக கூறிவிட்டு விலகிப்போவதில் என்ன இருக்கிறது. கொஞ்சம் அணுக்களுக்குள் நுழைந்து வெளிவரலாம்.
தொல்லியல் பொருள்களின் காலத்தை அளவிட கார்பன் முக்கிய பங்கெடுக்கிறது. இதில்  12, 13 14 என சில வகை உள்ளது. முதல் இரண்டும் சுயபுத்தியோடு தனித்து செயல்படக்கூடியவை, கார்பன் 14 தனியாக வாழ திராணியற்று யாருடனாவது சேர்ந்து வாழ்வதையே விரும்புகின்றது. மேலும் இதுதான் காலத்தை அளவிடுவதற்கு உதவப்போவதால் அது எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டுமல்லவா?  கொஞ்சம் அண்ணாந்து பாருங்க, வளிமண்டலம் தெரியுதா அதாவது வானம் அல்லது விசும்பு. அங்கு இருக்கக்கூடிய நைட்ரஜனை நியூட்ரான்கள் புணர்வதால் கார்பன் 14 பிறந்துவிடுகிறது. முன் கூறியது போல இது தனித்து வாழ இயலாத ஒரு ஜந்துவாகையால் பூமியின் உயிர்களில் தாவரங்கள் உட்பட அனைத்திலும் கலந்துவிடுகிறதே தவிர புணர்வதில்லை, மனிதனும் இதனிடமிருந்து தப்புவதில்லை. இதை 14CO2 எழுதுகிறார்கள் வேதியியலாளர்கள்.
இதுபோல் அனைத்து உயிர்களும் கார்பன் 14-ஐ தன் உயிருள்ளவரை சேர்த்துக்கொண்டே வருகிறது, உயிரிழந்து மண்ணுக்குள் புதைந்த பின்னர் இந்த செயலை இயல்பாக நிறுத்திவிடுகிறது. மண்ணுக்குள் மக்கியதும் இவை உமிழும் எலக்ட்ரான்கள் மீண்டும் நைட்ரஜனாக மாறிவிடுகின்றது. (வாழ்க்கைக்கான தத்துவத்தை உள்ளடக்கியதாக தெரிகிறதோ).  தனது அரை ஆயுளை இழக்க கார்பன் 14 கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறது. இந்த அளவையும் தற்கால நிலையில் வானின் நைட்ரஜன் அளவையும் ஒப்பிட்டு கால அளவை வரையறை செய்துகொள்கிறார்களாம்.

சனி, 9 ஜனவரி, 2016

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

கரிக்கோல் கோடுகள்

கடந்த இரண்டு மாதத்தில் வரைந்துவைத்த கரிக்கோல் கோடுகள்.