வெள்ளி, 3 ஜூலை, 2015

தனிமையில்தான் இருக்கிறேன்

தனிமையில் இருக்கிறேன்
கவிதைகளை தேடுகிறது மனம்

சிலர் ஞாபகத்தில் வருகிறார்கள்
அதில் சிலர் வெண்மேகத்தில் 
ஒழிந்துவிட்டனர்
சிலர் மேலே பறக்கிறார்கள்
முகங்களை படம் பிடிக்க
முயற்சிக்கிwறேன்
பறந்துகொண்டே இருக்கிறார்கள்

ஒழிந்தவர்கள்
எதையோ வரைந்திருக்கிறார்கள்
எனக்கான கேலிச்சித்திரமது 
பறந்தவர்கள் எதையோ எழுதிச் சென்றிருக்கிறார்கள்
எனக்கான எழுத்துக்களது 

தனிமையில்தான் இருக்கிறேன்
எனக்கான வார்த்தைகளோடு.......


நன்றி   மலைகள்.காம்  ஜூலை 15

3 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

ஊமைக்கனவுகள் சொன்னது…

ரசனை.

தொடர்கிறேன்.