புதன், 29 ஜூலை, 2015

இல்லை போன்றதொரு விளைவு

இன்றோடு மூன்றாவதுநாள்

இந்தியாவைப்பற்றி யானறியேன்

தமிழகத்தின் செய்திகளில்

ஊழல் இல்லை
கற்பழிப்பு இல்லை
களவு இல்லை
கள்ளக்காதல் கொலை இல்லை
சாதீய கொலை இல்லை
கௌரவக்கொலை இல்லை
பள்ளிகள் அலுவல்கள்
திரையரங்குகள் கடைகள்
நாளை மட்டும் இல்லை 

இல்லை

இவையெல்லாம்
இல்லை போன்றதொரு விளைவு

நாளையும் இப்படித்தானிருக்கும்
எதுவுமில்லாமல்
இல்லாத அவரின் உயிர்போல

நாளை மறுநாள்முதல்

இல்லை
அதற்கும் மறுநாள் முதல்
எல்லாம் இருக்கும்

இருக்கட்டுமே
அதுதானே வேண்டும் நமக்கு

ஆனால்
அவரின் ஆன்மா
எவரையும் பழிக்குமா எனக்கேட்டால்
தெரியாது..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

உணர்வுப் பூர்வமான அஞ்சலி